ராம்நகர் : ''வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி தற்கொலை வழக்கில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பாதுகாக்க மாட்டோம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் உறுதி அளித்தார்.ராம்நகரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:'கான்ட்ராக்டர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, நான் ராஜினாமா செய்தேன்.வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை வழக்கில், அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்வது எப்போது?' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கேட்டு உள்ளார். சந்திரசேகர் தற்கொலை குறித்து விசாரணை நடக்கிறது. காவி சீருடை
உண்மை வெளிவந்த பின்னர் அடுத்த கட்ட முடிவு எடுப்போம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பாதுகாக்க மாட்டோம். நாகேந்திரா ராஜினாமாவுக்கு வரும் 6ம் தேதி வரை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கெடு விதித்துள்ளார்.ஏன் அவ்வளவு நாட்கள்? இப்போது போராட்டம் நடத்தட்டும். யார் அவர்களை கட்டிப் போட்டது?எங்கள் ஆட்சியில் போலீஸ் துறை சீர்குலைந்து உள்ளதாக, அவர் கூறுகிறார். பா.ஜ., ஆட்சியில் போலீஸ்காரர்களை காவி சீருடை அணிய வைத்ததை, அவர் மறந்து விட்டாரா?சிறந்த வேட்பாளர்எம்.பி., பிரஜ்வல் கைது செய்யப்பட்டு இருப்பதை, ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.அவர் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. அவர்கள் பார்த்துக் கொள்வர். பிரஜ்வலை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?கர்நாடக மேலவையில் காலியாகும் 11 இடங்களுக்கு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடத்திடம் கொடுத்துள்ளோம். வேட்பாளர் விஷயத்தில் மேலிடம் எடுக்கும் முடிவு இறுதியானது.மேலவையின் பெங்களூரு பட்டதாரி தொகுதியில் எங்கள் வேட்பாளர் ராமோஜி கவுடா வெற்றி பெறுவார். பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ஏ.தேவகவுடா, பட்டதாரிகளுக்காக எதுவும் செய்தது இல்லை. அவரை விட எங்கள் வேட்பாளர் சிறந்தவர்.இவ்வாறு அவர் கூறினார்.