உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் வன்முறை: போலீஸ் சோதனை மையம் எரிப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: போலீஸ் சோதனை மையம் எரிப்பு

இம்பால்: மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், 200க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. ஒரு பிரிவினர் போலீசார் வெளிப்புற சோதனை மையத்திற்கு தீ வைத்தனர். தற்போது மேலும் இங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு மேலாக அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த சோய்பாம் சரத்குமார் சிங், 59, என்ற விவசாயி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். மீண்டும் வன்முறை வெடித்ததால், அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். புதிதாக இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் ஜிரிபாம் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த மாவட்ட நிர்வாகம், வன்முறை தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shankar
ஜூன் 08, 2024 16:09

கலவரத்தை கெட்ட எண்ணத்தில் நாங்கள் தான் என்று . கொழுப்பு எடுத்து அகம்பாவத்தில் நீங்களே உருவாக்கிவிட்டு நீங்களே எதற்கு தீர்வு கேட்டால் அதற்கு பெயர் என்ன தெரியுமா அவமானம் மலிவான இன மக்கள் என்று பெயர்


thiruvazhimaruban kuttalampillai
ஜூன் 08, 2024 14:20

கலவரம் செய்யும் நபர்களை இரும்பு காரம் கொண்டு அடக்க வேட்பாளர்.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 14:01

கடந்த முப்பதாண்டுகளில் மணிப்பூர் அமைதியாக இருந்த ஆண்டு எதுவுமே இல்லை. அந்நிய ஊடுருவலையும் மதமாற்றத்தையும் தடுக்கத் தவறியது முக்கிய காரணம் . அந்தஸ்து கொடுப்பதைப் பரிசீலிக்க கோர்ட் பிறப்பித்த உத்தரவு முக்கிய காரணம் . அதனை எதிர்ப்பவர்கள் வேறு யாராக இருக்கும்?


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி