உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் வன்முறை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி; 2 பேர் காயம்

மணிப்பூரில் வன்முறை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி; 2 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.மணிப்பூர் மாநிலம், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று கூகி இனக் குழு தாக்குதல் நடத்தி உள்ளது. பள்ளத்தாக்கு அருகே, சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் தங்கியிருந்த இடத்தை குறி வைத்து, கூகி இனக் குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்ஸ்பெக்டர் ஜாதவ் தாஸ் மற்றும் கான்ஸ்டபிள் அப்தாப் தாஸ் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இருவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=39tif0o7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநிலத்தில் தேர்தல் பணி முடிந்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் கூகி இனக் குழு தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sakthi Sakthiscoops
ஏப் 27, 2024 14:06

ஆண்டு கால காஷ்மீர் பிரச்னையை தீர்த்தது போல இதற்கும் முடிவு கட்டுங்கள்


Srinivasan Krishnamoorthi
ஏப் 27, 2024 13:45

கூகி மலை பகுதி மேட்டி சமவெளி என கலாச்சாரம் காத்து வாழ்ந்து வந்தாலும் , இரு பிரிவினரும் மலைவாசி இனம் தன அடிப்படையில் பர்மா எல்லை தாண்டி ஊடுருவி வந்தவர்கள்


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 10:20

முப்பதாண்டுகளாகவே மணிப்பூரில் கலவரங்களும் வேலைநிறுத்தப் போராட்டமும் நடக்கின்றன. காங்கிரஸ் ஆண்ட போதே தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு மேல் பந்த் நடந்தது. சுற்றுப்புற சூழல் கெடாமல் இருக்க பெரிய ஆலைகளை நிறுவ விடாததால் வேலையின்மை. அன்னிய மிஷிநரிகளின் சதி எல்லாம் சேர்ந்து அமைதி ஏற்படாமல் அடிக்கின்றன


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை