உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு தொடர வி.கே.சக்சேனா அனுமதி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு தொடர வி.கே.சக்சேனா அனுமதி

சிவில் லைன்ஸ்,:தன் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில், இரண்டு யூனியன் பிரதேசங்களின் மூன்று தலைமைச் செயலர்களின் கையெழுத்தைப் போலியாகப் போட்டதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதித்பிரகாஷ் ராய் மீது வழக்குத் தொடர, துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா அனுமதிஅளித்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மீது வழக்குத் தொடர, துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.2007 கால ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராய்,2017 மற்றும் 2021க்கு இடையில் இந்தமோசடியை செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.டில்லி அரசின் சிறப்பு செயலர் (விஜிலென்ஸ்) புகாரின் பேரில், ஐ.பி., எஸ்டேட் காவல் நிலையத்தில் ராய் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி குடிநீர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியபோது, டில்லி ஜல்விஹாரில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை கட்டுவதற்காக, 5 கோடி ரூபாய்க்கு பாரம்பரிய கட்டடத்தை இடித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை