| ADDED : ஆக 14, 2024 01:38 PM
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். கேரளாவின் வயநாட்டில், ஜூலை 30ம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதுவரை, 225 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்; 130 பேரை காணவில்லை.இந்நிலையில், இன்று( ஆகஸ்ட்14) வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். மேலும் அவர், ''படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை உதவித் தொகை வழங்கப்படும்'' என தெரிவித்தார்.