உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்: ராகுல் சபதம்

அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்: ராகுல் சபதம்

ஆமதாபாத்: 'அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.,வை தோற்கடித்தது போல், குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: கடவுளுடன் எனக்கு நேரடி தொடர்பு உள்ளது என பிரதமர் மோடி கூறுகிறார். லோக்சபா தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ., ஏன் தோல்வியடைந்தது.ராமர் கோயில் கட்ட வேண்டும் என அத்வானி ரத யாத்திரை நடத்தினார். பிரதமர் மோடி அவருக்கு உதவினார். ராமர் கோயில் திறப்பு விழாவில், அதானி, அம்பானி ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் ஏழைகள் யாரும் பங்கேற்க அனுமதியில்லை.

தோற்கடிப்போம்

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.,வை தோற்கடித்தது போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி பைசாபாத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தோற்கடிக்கப்படுவார். அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவரது அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் பைசாபாத் தொகுதியில் போட்டியிடவில்லை.

இழப்பீடு வழங்கவில்லை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, ஏழை மக்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இன்று வரை நரேந்திர மோடி அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இரண்டாவதாக, விவசாயிகளின் நிலத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. அவர்களுக்கு உரிய இழப்பீடு கூட வழங்கப்படவில்லை. இது மக்களை கொதிப்படையச் செய்தது.

பயப்பட வேண்டாம்

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்ததற்கும், இண்டியா கூட்டணி வெற்றி பெறுவதற்கும் இவையே காரணம். குஜராத்தில் எங்கள் அலுவலகத்தை பா.ஜ.,வினர் அடித்து நொறுக்கி, எங்கள் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இப்போது காங்கிரசார் யாருக்கும் பயப்பட வேண்டாம். இவ்வாறு ராகுல் பேசினார்.

வீடியோ வெளியிட்டு ராகுல் வருத்தம்

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ரயில் ஓட்டுநர்களை சந்தித்தது தொடர்பாக, வீடியோ ஒன்றை ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடியின் ஆட்சியில் தெருவோர வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ஒரு நாள் சம்பளத்தில் நான்கு நாட்கள் தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு பைசா கூட சேமிக்காமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.ஜிடிபி நகரில் தெருவோர வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்கால இந்தியாவை உருவாக்குபவர்களின் குடும்பங்கள் ஆபத்தில் உள்ளன. தொழிலாளர்களுக்கு அவர்களின் முழு உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதையை வழங்குவேன். இது எனது தீர்மானம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

மணிப்பூர் செல்கிறார் ராகுல்

காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாளை மறுநாள் (ஜூலை 8) மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக அங்கு நீடித்துவரும் கலவரத்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் சந்தித்து பேச இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

V RAMASWAMY
ஜூலை 09, 2024 18:37

கிழித்தீர்கள்..


Barakat Ali
ஜூலை 07, 2024 16:37

இவர் இப்படிப் பேச பாஜகவே காரணம் ....


Dharmavaan
ஜூலை 07, 2024 08:19

நாட்டில் பல குற்றங்களுக்கும் காரணம் குற்றவாளிகளிடம் நீதி காட்டும் கரிசனம் காரணம் நீதி கட்டுப்படுத்த பட வேண்டும்.இல்லை சமுதாயம் கெடும்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 07, 2024 05:52

இவன் இப்படி தெனாவெட்டாக பேச கோர்ட் இவனுக்கு கொடுத்த தண்டனையை, நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம் தான் காரணம் , மேலும் சுயநல ஹிந்துக்கள் முக்கிய காரணம்


Tirunelveliகாரன்
ஜூலை 08, 2024 11:12

இந்த கருத்தில் கொஞ்சமாவது அரசியல் பார்வை இருக்கா? நாட்டை பிளவு படுத்ததும் பார்வை தான் இருக்கிறது.


venugopal s
ஜூலை 07, 2024 01:28

குஜராத்தில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி ஒன்றும் செய்யத் தேவையில்லை, சும்மா இருந்தாலே போதும். பாஜகவினரே அந்த வேலையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் செவ்வனவே செய்து விடுவார்கள்.


vadivelu
ஜூலை 07, 2024 07:43

நல்ல சப்தமாக சொல்லுங்க. யாரும் சொல்ல வேண்டாம், எதிர்த்து நில்லுங்க போதும். உங்கள் எண்ணத்தில் பாஜக மக்களால் முற்றிலுமாக புறக்கணிக்க பட்ட கட்சி, காங்கிரஸ் மக்களின் பேராதரவு பெற்றுள்ள கட்சி. அயோத்தி ஒன்றே சாட்சி. கண்ணை ஓடி கொண்டு நிம்மதியாக உறங்கினால் போதும். அத்தனை இடங்களும் காங்கிரசுக்குத்தான். விடிந்து விட்டது கனவும் களைந்து விட்டது எழுந்து பாருங்க. அங்கே என்று கதர வேண்டுமே.


பேசும் தமிழன்
ஜூலை 06, 2024 23:58

அதையும் நாங்கள் கேட்க வேண்டி உள்ளது...... எல்லாம் எங்கள் தலைவிதி.


சந்திரசேகர்
ஜூலை 06, 2024 21:58

ஆமாம் உங்களை நம்பி எப்படி அந்த மக்கள் ஓட்டு போட்டார்கள் என்கிற ரகசியத்தை வெளியே சொல்ல முடியுமா?காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதை போலும். எல்லோரும் பணக்காரர்கள் போல் இருந்ததாகவும். எல்லோரும் அரசாங்க வேலை இருந்ததாகவும். ஓட்டு போட்ட மக்கள் அப்படியே தான் உள்ளார்கள். ஆனால் ஓட்டு வாங்கிய நீங்கள் எங்கையோ போய் விட்டீர்கள்


vikram
ஜூலை 06, 2024 21:57

99 இதுக்கு இவல்வு பில்டுப் தனியா நினு பரு


sankaranarayanan
ஜூலை 06, 2024 20:35

வாஜபாய் அவர்கள் பிரதமராக இருக்கும்போது வீராப்பாக இப்போது பேசும் யாரோ ஒருவர் அமெரிக்காவில் சுங்கதுறையினரால் கைது செய்யப்போட்டு இருந்த நிலையில் ரகசியமாக அவரின் தாயார் பிரதமர் வாஜபாய் அவர்களின் காலின் விழுந்து மன்றாடி எப்படியாவது என் பிள்ளையையை காப்பாற்றி இந்தியா கொண்டுவாருங்கள் என்று சொல்லி அவர் கொண்டுவரப்பட்டார் என்பது நடப்பு


GMM
ஜூலை 06, 2024 20:05

ஏழை மக்களின் ஏராளமான நிலங்கள் எடுக்கபட்டன. முக்கிய நகரில் நிலம் இருந்தால் ஏழையா? அரசு இழப்பீடு சந்தை மதிப்பை விட குறைவாக தான் இருக்கும். காங்கிரசின் தவறான கொள்கை முடிவு மற்றும் மிக பெரிய ஊழல்கள் தான் வறுமைக்கு காரணம். பிஜேபிக்கு இரு நன்மைகள். முக்கிய எதிர்கட்சிகளை காங்கிரஸ் அதிகாரம் செலுத்தி, அழித்துவிடும். காங்கிரஸ் தனித்து பிஜேபியை எதிர்க்க முடியாது. ராகுல் மகா கூட்டணி அமைத்தும் / அதிக தேர்தல் செலவுகள் செய்தும் எதிர்க்கட்சி அந்தஸ்து. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிகிறது.


Rpalnivelu
ஜூலை 09, 2024 18:09

இதை போலவே ஒரு தானை தலைவரும் வெளி நாடு சென்று திரும்பும்போது டில்லி ஏர்போர்ட்டில் மாட்டிக் கொண்டார்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ