உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்க ரொம்ப புத்திசாலிங்க...

நாங்க ரொம்ப புத்திசாலிங்க...

நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களுக்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க முடியாமல் குடிநீர் வாரியம் திணறுகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் ஹரியானா பா.ஜ., அரசையும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. நகரில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது.தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் வினியோகத்துக்காக வந்த டேங்கர் லாரியில் இருந்து, தண்ணீர் எடுக்கும் பொதுமக்கள் இவர்கள்.தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்த காட்சி புதுமையாகத் தான் இருக்கும். ஏனெனில் அங்கே டேங்கர் லாரி தண்ணீருக்காக நம்மூரில் வரிசையில் நின்று, அடிதடி நடக்கும்.இங்கே அப்படி இல்லை என்பதைத்தான் இந்த படங்கள் விபரிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை