உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கங்கனாவுக்கு நடந்தது என்ன? எப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்!

கங்கனாவுக்கு நடந்தது என்ன? எப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடிகை கங்கனாவுக்கு சண்டிகரில் விமான நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பஞ்சாப் போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் விவரிக்கப்பட்டுள்ளது.நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.

'சஸ்பெண்ட்'

தேர்தல் வெற்றிக்குப் பின் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கடந்த 6ம் தேதி டில்லி புறப்பட்டார். இதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த போது, அவரை மத்திய தொழிற்படையைச் சேர்ந்த பெண் போலீஸ் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அந்த பெண் போலீஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதுடன், நேற்று முன்தினம் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தின் போது கங்கனா சி.ஐ.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார், இரண்டு பெண் போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு வந்தார்.அப்போது இந்த தாக்குதல் நடந்தது. இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சாப் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துஉள்ளனர். எப்.ஐ.ஆரில்., கூறியுள்ளதாவது: நடிகையும், புதிதாக எம்.பி.,யாக வெற்றி பெற்றவருமான கங்கனா, ஜூன் 6ல் சண்டிகரில் இருந்து டில்லிக்கு விமானத்தில் பயணிக்க இருந்தார். மாலை 3:26 மணிக்கு பாதுகாப்பு சோதனைகளை முடித்த அவர், சி.ஐ.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசாருடன் தான் செல்ல வேண்டிய விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் வாயிலுக்கு நடந்தார்.

பரிசோதனை

அந்த சமயத்தில் பக்கத்தில் பெண்களை பரிசோதிக்கும் பூத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர், கங்கனாவை நோக்கி வந்து, பட்டென அவர் கன்னத்தில் அறைந்தார். கங்கனாவின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸ், குல்விந்தரை பிடித்து தள்ளிவிட்டார். அதன்பின் கங்கனா விமானத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார். தவறாக நடந்து கொண்ட குல்விந்தர் மீது வழக்கு பதிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

என்றும் இந்தியன்
ஜூன் 09, 2024 21:25

இதில் வேடிக்கை என்னவென்றால் கங்கனா ரனாவத் இதை 2020ல் சொன்னார் 4 வருடம் கழித்து அவளுக்கு அறை விட்டது இந்த பெண் இன்ஸ்பெக்டர்???ஏன்???பணம் கொடுக்கப்பட்டது அவளுக்கு இப்படி செய் என்று அவள் செய்தாள் அவ்வளவே???


Senthoora
ஜூன் 10, 2024 13:42

கேவலமாய் இல்லை


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 18:15

இந்தத் தாக்குதல் நியாயம் என்றால் இந்திராவை பாதுகாப்பு வீரரே சுட்டதும் நியாயமாகிவிடும் . IPFK ஆல் பாதிக்கப்பட்ட தணு செய்த செயலும்தான். வன்முறை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாத குற்றம்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 16, 2024 08:38

நியாயம் கிடைக்காத பட்சத்தில் இதுபோல சம்பவங்கள் நடந்திருக்கு.


Madhavan
ஜூன் 09, 2024 17:44

அந்தப் பெண் அதிகாரி அதுவும் சீருடை அணிந்து கொண்டிருக்கும் ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்க வேண்டிய தருணத்தில் கூட்டத்தில் ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து அடையாளம் கண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதனைக் கண்டிக்காமல் கண் மூடித்தனமாக ஆதரித்தால் இது ஒரு மோசமான முன்னுதாரணத்திற்கு வழி வகுத்து விடும். இந்து மதத்தைக் கேலி செய்பவர்கள், நடிக, நடிகர்களைக் கேலி செய்பவர்கள், கிசு கிசு எழுதுபவர்கள்


RAAJ68
ஜூன் 09, 2024 13:39

இவரை அடித்த போலீசாருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுத்துள்ளார் ஒரு சர்தார்ஜி. இப்படிப்பட்ட வன்மம்.


Senthoora
ஜூன் 10, 2024 13:44

அதான் விவசாயிகள் போராத்தை கேவலப்படுத்தியவருக்கு அடி .


Ravichandran S
ஜூன் 09, 2024 09:20

தாயை இழிவுபடுத்திவிட்டார் அதனால் அடித்தேன் என்பது குற்றச்சாட்டு ஒத்துக்கொள்ள கூடிய தான். இது போல ஒவ்வொருவரும் சட்டத்தை தன்மையில் எடுத்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும். துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் இதை வைத்து மற்றவர்கள் என்னை அது மாதிரியாக சொன்னார்கள் அடித்தேன் என்பார்கள். இவர்களுக்கு வரும் பின் வினவுகள் தெரியாது ஒரு தீவிரவாத கூட்டமே வரும்


GMM
ஜூன் 09, 2024 08:09

பாதுகாப்பு கொடுக்க உடன் சென்றது மத்திய படை. பாராளுமன்ற பெண் உறுப்பினரை அடித்ததும் மத்திய படை கான்ஸ்டபிள். மத்திய படை உயர் அதிகாரி தான் விசாரிக்க, தண்டிக்க வேண்டும். மாநில போலிசாரிடம் மக்கள் போல் ஏன் புகார் கொடுக்க வேண்டும்? பணி ஒழுங்கு இல்லை என்றால், டிஸ்மிஸ் செய்ய என்ன தயக்கம்? தண்டனை தான் குற்றம் தடுக்க உதவும். எதுவும் அரசியல், சாதி பிரச்சனையாக மாற்றப்படுகிறது.


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 07:01

அரசு வேலையில் இருப்பவர்கள் கட்சி / அரசியல் போன்ற காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே நிரந்தரமாக பதவியை விட்டு தூக்கவேண்டும்.


Senthoora
ஜூன் 10, 2024 13:47

அரசு வேளையில் பாதுகாப்புக்காக இருக்கும் அதிகாரிகளை தீவிரவாதி என்று திட்டி தாக்குவது, அவர்களை என்ன பண்ணுவது.


sankaranarayanan
ஜூன் 09, 2024 06:52

பாதுகாப்பாளர்கள் கூட இருந்தும்கூட கங்கனா எம்பிக்கு நிகழ்ந்தது யாருக்கும் இனி நடக்கக்கூடாது மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பாளர் இவரை கன்னத்தில் அறைந்தது வேலியே ஓணானை மேய்ந்தாற்போல உள்ளது மக்களை பாதுகாக்க வேண்டிய பெண் பாதுகாப்பாளரே அடுத்து பெண்ணை அறைவது என்பது மக்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது இனியாவது இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் மக்களை பாதுகாக்க வேண்டும்


Kalaiselvan Periasamy
ஜூன் 09, 2024 06:30

இடஒதுக்கீடு என்ற லச்சணத்தில் தரமற்றவர்களை வேளையில் சாமர்த்தியத்தால் வந்த வினை இது .


Senthoora
ஜூன் 10, 2024 13:48

இல்லை விவசாயப்போராட்டத கேவலப்படுத்தியதால் வந்த வினை.


mayavan
ஜூன் 09, 2024 06:28

காவலர் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் மற்றும் நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி