உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 வயது பெண்ணை வனப்பகுதியில் சங்கிலியால் கட்டி போட்டு சென்றது யார் ?

50 வயது பெண்ணை வனப்பகுதியில் சங்கிலியால் கட்டி போட்டு சென்றது யார் ?

மும்பை: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயது பெண் காட்டிற்குள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டம், சாவந்த்வாடி தாலுகாவிற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஆடு, மாடு மேய்பவர்கள் சென்றுள்ளனர். அப்போது பெண் ஒருவரின் கதறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது வெளிநாட்டு பெண் மரத்தில் இரும்புச் சங்கிலியால் காலில் கட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இரும்பு சங்கிலியை அகற்றி அப்பெண்ணை மீட்டனர். உடல் மெலிந்து எலும்பும் , தோலுமாக மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார். போலீசார் விசாரித்த போது சரியாக பேச முடியாமல் ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகவும், தன்னை கணவரே இரும்பு சங்கிலியால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. போலீசார் கூறுகையில், 50 வயது மதிக்கத்தக்க அப்பெண் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி உள்ளது. சுமார் 40 நாட்களுக்கு மேல் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:48

என்ன கொடுமை சரவணன். ஒரு பெண்ணை காட்டில் கட்டிப்போடக்கூட தமிழகத்தில் இடமில்லாமல் போனது? தனி நபர் நீதிபதி வைத்து விசாரிக்க வேண்டும்.


Ray
ஜூலை 29, 2024 22:38

நாட்டில் மிஞ்சியுள்ளது வெறுப்பு மட்டுமே அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றார்கள்


J.V. Iyer
ஜூலை 29, 2024 22:23

மாடல் அரசின் சாதனைகள். நீங்கள் மீண்டும் மீண்டும் கையூட்டு வாங்கிக்கொண்டு இவர்களுக்கு வோட்டு போடுங்கள். தமிழகம் சுடுகாடு ஆகும்வரையில். அப்போதும் புத்தி வராது இந்த மக்களுக்கு.


Iniyan
ஜூலை 29, 2024 20:52

என்ன சார் இது. எல்லா கொடுமைகளும் தமிழ் நாட்டிலிருந்தா ??


வாய்மையே வெல்லும்
ஜூலை 29, 2024 22:11

இனியன்சாரே ,, நாம தான் பெரியார் பிறந்த கன்னட தமிழ் பூமியில் இருக்கோம் எல்லா பிரச்சனைகளும் தாடிக்குள்ளே இருந்து தான் வரும்.. நீங்க எந்தமாதிரி தாடி என என்னை எதிர்கேள்வி கேட்கக்கூடாது ..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை