உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 120 அடியை எட்டி நிரம்பியது. இந்த ஆண்டில், ஜூலை 30க்கு பின்னர் மீண்டும் 2வது முறையாக, அணை நிரம்பியுள்ளது. இன்று நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியில் இருந்து 45,500 கனஅடியாக உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 120.41 அடியாக உள்ளது. பாசன தேவைக்காக விநாடிக்கு 35,550 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

உடுமலை அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைகை அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து 2,708 கனஅடியாக உள்ளது. தற்போது மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59.50 அடியை எட்டியுள்ளது.

சோத்துப்பாறை அணை

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணைக்கான நீர்வரத்து 226 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் மழை இருக்கும் என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், தமிழகத்துக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளம்

வேலூரில் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காட்பாடி சாலை, வி.ஜி.ராவ் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக அதிகரித்தது. ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Yasararafath
ஆக 13, 2024 11:36

தண்ணீர் நிறைய வேண்டும் தமிழ்நாட்டிற்க்கு.


Venkatesan Srinivasan
ஆக 13, 2024 10:45

காவிரி ஆற்றின் நீரை முழுமையாக உபயோகிக்க இரு கரைகள் கொண்டு சுமார் 40 கிலோ மீட்டர் பாசன வசதி பெறும் நிலப்பரப்பை உள்ளடக்கிய தனி காவேரி மாநிலம் உருவானால் அந்த மாநிலம் முழு கவனத்துடன் காவிரி நீரை வீணாக்காமல் பயன்பாடு செய்ய திட்டங்கள் வகுக்கும். ஆற்றில் வெகுவாக சேர்ந்துள்ள வண்டல் மற்றும் மணல் அகற்றி ஆங்காங்கே நிறைய தடுப்பணைகள் உருவாக்கினால் நீர் கொள்ளளவு அதிகரித்து மக்களுக்கு பயன் அளிக்கும்.


Nallappan
ஆக 13, 2024 10:21

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அல்ல கடலுக்கு தண்ணீர் திறப்பு தண்ணீர் போய்சேராத பகுதிகளை தங்களது அந்த பகுதி நிருபர்களிடம் கேளுங்கள்..


Sudar Velan
ஆக 13, 2024 10:21

எப்போதும் போல கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட வேண்டியதுதான் ..... நெஞ்சு பொறுக்கவில்லை, தமிழக அரசின் நிலை கண்டு ..... தற்போது வரை காவிரித்தாய் கடைமடைகளுக்கு சென்று சேரவில்லை, ஏரிகளும் நிரம்பவில்லை ...


ديفيد رافائيل
ஆக 13, 2024 10:20

காவிரியில் தண்ணீர் திறக்க allow பண்ணாதீங்க தமிழ் நாட்டுல இருக்குறவங்க. அப்ப தான் அடுத்த தடவைல இருந்து ஒழுக்கமா நாம கேட்குறப்ப தண்ணீர் திறந்துவிடுவானுங்க.


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 10:11

வழக்கம் போல நீரை கடலுக்கு அனுப்புவோம் பக்கத்து மாநிலங்களில் I.ன்.D.I கூட்டணி ஆட்சியாளர்கள் இருப்பதால் மத்திய மோடியின் தலைமையிலான அரசை திட்டுவோம் ஜாபர் சாதிக் வகையறா வியாபாரத்தை வெள்ளமாக்குவோம்


சமூக நல விரும்பி
ஆக 13, 2024 09:48

தமிழ் நாட்டில் வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தாலும் அரசு செயல்படுவது இல்லை. MLA மேப் எல்லோரும் தூங்குகிறார்கள். கண் துடைப்பு நாடகம் மட்டும் அவ்வப்போது நடைபெறுகிறது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ