உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி சொல்லே மந்திரம்: முதல்வராக்க கெஜ்ரிவால் தந்திரம்!

மனைவி சொல்லே மந்திரம்: முதல்வராக்க கெஜ்ரிவால் தந்திரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா விரைவில் முதல்வராவதற்காக தந்திரமாக செயல்பட்டு வருகிறார்' என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.இது குறித்து ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் மிக குறைந்த நாள் மட்டும் முதல்வராக பதவி வகிப்பார். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா விரைவில் முதல்வராக தந்திரமாக செயல்பட்டு வருகிறார். அவர் வருவாய்த்துறையில் சக ஊழியர் மட்டுமல்ல. அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்கள். ஒன்பது முறை கெஜ்ரிவால் சம்மன்களுக்கு பதிலளிக்கவில்லை. பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். காங்கிரசுக்கு ரூ.1,700 கோடி அபராதம் கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களின் நேரம் முடிந்துவிட்டது. காங்கிரசாரின் வருமானம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சிறையில் இருந்து மக்கள் பணிகளை பார்ப்பது கடினமாக உள்ளதால், மனைவியை முதல்வர் ஆக்க கெஜ்ரிவால் திட்டம் தீட்டி வருகிறார் என டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Srinivasan Krishnamoorthi
மார் 29, 2024 20:02

TWO English proverbs mean as below: Brooms can not stay in vault Broom is meant for its purpose


HoneyBee
மார் 29, 2024 17:15

இவனெல்லாம் ஒரு ஜென்மம் எப்போது ஹசாரே சொன்னாரோ அப்போதே இவன் தகுதி இழந்து விட்டான் இன்னொரு வாரிசு குடும்ப ஆட்சி தயாராகிறது


Palanisamy Sekar
மார் 29, 2024 16:40

லாலு மனைவியின் ராஜதந்திரத்தை பார்த்தோமே அடடா என்னென்னு சொல்ல? டெல்லி மக்கள் இனியாவது ஊழல்வாதி கெஜ்ரிவாலை புரிந்துகொள்ளணும்


முருகன்
மார் 29, 2024 16:29

இதை இவர்கள் எதிர் பார்க்கவில்லை


Kasimani Baskaran
மார் 29, 2024 16:24

அரசுக்கு மூன்று கோடுகள் போட்டு தனியாருக்கு இலவசம் போல சாராயம் விற்க அனுமதித்தது வியூகம் தமிழகம் போல கூடுதலாக பைசா வரி கூட செலுத்தாமல் சைடில் வியாபாரம் வேறு நடக்கிறது குடிமக்களை கொல்வது ஒரு பக்கம் - அடுத்த பக்கம் வரியும்


raja
மார் 29, 2024 16:06

0000


A Viswanathan
மார் 29, 2024 19:36

இது ஒன்றும் புதிதல்ல. ஊழல் அரசியல்வாதிகள் செய்வது தான்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி