உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்

ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி., மாநில ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் பா.ஜ.,வில் இணைந்தார். ம.பி., மாநில ஐகோர்ட்டின் இந்தூர் கிளையின் நீதிபதியாக பணியாற்றியவர் ரோஹித் ஆர்யா கடந்த ஏப்ரலில் பணி ஓய்வு பெற்றார். மூன்று மாதத்திற்குள்ளாக பா.ஜ,,வில் இணைந்துள்ளார்.தலைநகர் போபாலில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். பின்னர் பா.ஜ.,வில் தன்னை இணைத்து கொண்டார். அவரை மாநில பொறுப்பாளர் ராகவேந்திரா சர்மா வரவேற்றார். முன்னதாக கடந்த 2020 ம் ஆண்டில் பெண்ணிற்கு எதிரான குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கிய விவகாரத்தில் ரோஹித் ஆர்யா குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஜாமின் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நேரடியாக தலையிட்டது. தொடர்ந்து ஜாமினை ரத்து செய்தது. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஜாமின் மனுக்களை கையாள்வது குறித்து கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்தது.62 வயதான நீதிபதி ஆர்யா 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். தொடர்ந்து 2003-ல் ம.பி.,ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2013-ல் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும், 2015-ல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றார். 2024 ஏப்ரலில் ஓய்வு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூலை 15, 2024 13:31

அண்ணனுக்கு ஒரு ஆளுநர் பதவி பார்சல்!


A
ஜூலை 15, 2024 11:03

nothing wrong.. after retirement he can join any political party openly. someone 200 Rs uppis - koovungadaa parambara uppis


va sri.nrusimaan
ஜூலை 15, 2024 08:11

what is wrong in joining a political party after retirement? a lot of judiciaries who r in service [especially those joined b4 2017] r siding with present opposition/their alliance parties] nothing wrong in his act.


aaruthirumalai
ஜூலை 14, 2024 22:59

கொடுத்த தீர்ப்பெல்லாம் சரியா இருக்குமா?


ES
ஜூலை 14, 2024 22:34

People will support this too pathetic


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 21:42

கழக மாவட்ட செயலாளரை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது திமுக. கேரள மாநில அமைச்சராக இருந்த கிருஷ்ணய்யர் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.இதற்கெல்லாம் வரையறை இல்லை.


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 21:39

கட்சி எம்பி யாக இருந்தவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து அவர் ஒய்வு பெற்ற பின்னும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆக்கியது காங்கிரசு. அதற்குப்பின் அவரை மீண்டும் MP பதவியில் அமர வைத்தது இன்னும் ஆச்சர்யம்.


அரசு
ஜூலை 14, 2024 21:14

இவர் பதவியில் இருந்த போது கொடுத்த தீர்ப்பை எல்லாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


Vijayakumar Srinivasan
ஜூலை 15, 2024 00:44

உண்மை தான் சார்.நம்மூரிலும்.இது.சரியாகலாம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி