உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் தாதா டில்லியில் கைது

கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் தாதா டில்லியில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 22 வயதான பெண் தாதாவை, போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலி தன்வார், 22. இவர், லோனி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.இந்நிலையில் கைலி தன்வார், டில்லி பதேபூர் அருகே மண்டி என்ற கிராமத்தில் தலைமறைவாக உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அங்கு சென்ற தனிப்படையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைலி தன்வாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தீபக் அக்ரோலா, கரம்வீர் காலா ஆகிய ரவுடி கும்பல் அடங்கிய குழுவில் தானும் இருந்ததாக ஒப்புக் கொண்டார். மேலும், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது அக்கொலையை செய்ததாக கைலி தன்வார் ஒப்புக்கொண்டார்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை, போலீசார் சிறையில் அடைத்தனர். முன்னதாக, இதே கொலை வழக்கில் முகமது பைஜன் என்பவரை கடந்த 3ம் தேதி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
மே 29, 2024 10:49

Women Criminals have Increased Claiming Equality BUT CaseHungry Judges, VoteHungry Rulers & NewsHungry Media STILL Biasedly Treat them as Innocents & Affected


Kasimani Baskaran
மே 29, 2024 05:51

அடுத்த படமெடுக்க கதை கிடைத்துவிட்டது. கைலி 1, கைலி 2 - அட்லி காட்டில் மழைதான்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ