உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது போதையில் தகராறு போலீசை தாக்கிய பெண்கள்

மது போதையில் தகராறு போலீசை தாக்கிய பெண்கள்

மும்பை, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான விராரில் உள்ள கோகுல் டவுன்ஷிப்பில் மதுபான விடுதி உள்ளது. இங்கு நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற காவ்யா, அஸ்வினி, பூனம் ஆகிய மூன்று பெண்கள் போதையில் தகராறு செய்துள்ளனர். இதனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் மூவரும், சாலையில் தகராறு செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது. விரைந்து வந்த போலீசார் மூவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்கள், திடீரென போலீசாரை தாக்கினர்.அவர்களை பிடிக்க முயன்ற பெண் போலீஸ் கையை கடித்ததுடன், அவரது சீருடையை போதை பெண் ஒருவர் கழற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த கூடுதல் போலீசார், தகராறு செய்த மூன்று பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஆண் போலீசையும் அந்த பெண் தாக்கி, கையை கடித்தார். இதையடுத்து மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ