உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரர் பிடிபட்டார்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரர் பிடிபட்டார்

புதுடில்லி,:மாநில அளவிலான போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், கொலை முயற்சி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் குற்றப் பிரிவு துணைக் கமிஷனர் சதீஷ் கவுசிக் கூறியதாவது:மல்யுத்த வீரர் சுமீத்துக்கும் விஷ்ணு என்பவருக்கும் ஒரு பெண்ணுடன் நட்பு கொள்வது தொடர்பாக பகை ஏற்பட்டுள்ளது. தன் நண்பர்கள் சாகர், நிகில், தேவ் மற்றும் அங்கித் ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி விஷ்ணு மீது சுமீத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதில் இருந்து லாவகமாக தப்பிய விஷ்ணு இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.சுமீத் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சுமீத் மற்றும் அவரது நண்பர்கள் மீது ஏப்ரல் 24ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், முகர்பா சவுக் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வாயிலாக டில்லியில் இருந்து ஹரியானாவுக்கு சுமீத் தப்பிச் செல்ல முயன்றபோது நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை