உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வந்தது புது சட்டம்

வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வந்தது புது சட்டம்

புதுடில்லி: நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு நேற்று ( ஜூன் 21) அமல்படுத்தியது.யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, என்டிஏ மற்றும் ரயில்வே, வங்கி துறைகளில் நடக்கும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kcp40zvs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கடுமையான தண்டனை

வினாத்தாள் கசிவு மற்றும் விடைத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஜாமினில் வெளிவர முடியாது

இந்த சட்டத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் ஜாமினில் வெளிவர முடியாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வாரண்ட் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்ய முடியும். குற்றவாளிகள் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது

கடுமையான அபராதம்

தவறு நடந்தது அறிந்தும், அது பற்றி புகார் அளிக்காத தேர்வை நடத்துபவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.

ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு குறி

தேர்வு நடத்தும் அமைப்புகளில் இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கு தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதனுடன் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தேர்வு நடத்துபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படலாம்.

அப்பாவிகளுக்கு ஆறுதல்

தங்களுக்கு தெரியாமல் குற்றம் இழைக்கப்பட்டதையும் அதை தடுக்க அவர்கள் தங்களால் முயன்றதையும் நிரூபிக்கும் நபர்களுக்கு பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தில் முக்கிய அம்சங்கள் உள்ளன.இந்த சட்டம் கடந்த பிப்., மாதம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது, நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல், முறைகேடு நடந்ததை தொடர்ந்து நெட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், சிஎஸ்ஐஆர் - யுஜிசி - நெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், இச்சட்டத்தை நேற்று முதல் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Svs Yaadum oore
ஜூன் 22, 2024 16:34

ஆனால் இந்த சட்டத்தை சமூக நீதி மத சார்பின்மையாக தமிழ் நாட்டில் விடியல் அமல்படுத்தாது ....


கனோஜ் ஆங்ரே
ஜூன் 22, 2024 16:40

வினாத்தாள் முறைகேடு தமிழ்நாட்டில நடக்கல சாமியோவ்... நடந்தது குஜராத்ல, ஹரியானாவுல போன்ற மாநிலத்துல... அவங்கதானே படிக்காத... படிக்க தெரியாதவர்கள்.. நீட், நெட் முறைகேடுகள் நடந்தது தமிழ்நாட்ல நடந்தா அமல்படுத்தலாம்...


Indian
ஜூன் 22, 2024 16:51

மத்திய அரசாங்கமே சும்மா கண் துடைப்புக்கு தான் , இந்த மாதிரி சட்டம் கொண்டு வந்துள்ளது


உலகநாதன்
ஜூன் 22, 2024 15:27

இதுக்கு மேலே சட்டங்களை வெச்சுக்கிட்டே ஒண்ணும்.பண்ண முடியலை. இதுமாதிரி சட்டங்களை சட்ட ரீதியா எதிர்கொண்டு சாட்சிகளை.பல்டியடிக்க வெச்சு வெளியே வந்துருவோம்ல . கோல்ட்ஹேர் மந்திரி ஆயாச்சு


Shankar
ஜூன் 22, 2024 14:37

மிகச் சிறப்பான சட்டம் இந்த தப்பு செய்தவர்களை கண்டிப்பாக ஜாமீனில் விடாத வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்து சரியான தீர்ப்பாக சிறைதண்டனை கொடுக்க வேண்டும் திரு நரேந்திர மோடி அவர்களையும் அவருடைய பிஜேபி அரசையும் இதன் மூலம் பாராட்டபட வேண்டும்


GMM
ஜூன் 22, 2024 14:25

தற்போதைய நிலையில் இந்த சட்டம் மிக அவசியம். ஜாமீனில் வெளியே வர முடியாது என்பது இன்னும் சிறப்பு. வழக்கறிஞர்கள் நிர்வாகத்தை கேலி கிண்டல் செய்து வாதிடுகின்றனர். ?அரசு அதிகாரிகள் தவறில் கலந்து இருந்தால், வேலை நீக்கம் அவசியம். அவர் குடும்பத்தினர் அரசு பதவி பெற தகுதி இல்லை. அரசியல் தலையீடு இருந்தால், அந்த பகுதியில் கட்சி தடை செய்ய வேண்டும். கல்லூரி ஈடு பட்டு இருந்தால், நிதி இன்றி அரசுடமை.


RajK
ஜூன் 22, 2024 14:23

சம்பந்தப்பட்ட அரசு ஊழியரியை தண்டிக்க இதே போன்ற கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும்.


rsudarsan lic
ஜூன் 22, 2024 13:36

இதைவிட அபத்தமான சட்டம் இருக்கா முடியாது. லஞ்ச ஒழிப்பு சட்டம் போல. பேப்பர் லீக் ஆனால் பேப்பர் தயாரித்தவரை போட்டுத்தள்ளலாம்


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 13:13

முறைகேடுகள் மூலம் தேர்தலில் வென்றால் பதவி மட்டுமே பறிபோகும். சிறை, அபராதம் விதித்த வரலாறு உண்டா?


S BASKAR
ஜூன் 22, 2024 12:58

நேற்று முதல் அமுல்படுத்திய சட்டத்தை 6 மாதம் முன் தேதியிட்டு அமுல் படுத்தி இருக்கலாமே


மேலும் செய்திகள்