மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
பெங்களூரு: சின்மயா வித்யாலயா பள்ளியில், சுவாமி சின்மயானந்தாஜியின் 108வது ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பெங்களூரு ஹலசூரு செயின்ட் ஜான்ஸ் ரோடு ருக்மணி காலனியில் உள்ள, சின்மயா வித்யாலயா பள்ளியில், சுவாமி சின்மயானந்தாஜியின் 108 வது ஜெயந்தி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, யோகா, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கை, ஆப்ரிக்கா நாடுகளின், பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் நாகலாந்து, குடகு, கும்மு, யக் ஷகானா நடனமும் அரங்கேறின.ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று விவேகானந்தா ஹவுஸ், சின்மயா ஹவுஸ், சங்கரா ஹவுஸ் அணிகள் சாதனை படைத்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் விருது வென்ற புனித் நந்தகுமார், சவுத் யுனைடெட் கால்பந்து கிளப் தலைமை பயிற்சியாளர் குருபிரதாப் சிங், தலைமை போக்குவரத்து வார்டன் முரளிதரன், உலக கால்பந்து வீராங்கனை பத்மபிரியா சிங், பள்ளியின் முதல்வர் தேவகி குமார், பள்ளியின் கரஸ்பான்டன்ட் ரஞ்சிதா பழனிவேல், உடற்கல்வி ஆசிரியைகள் உஷா பிரகாஷ், ராஜிவ் விஸ்வகர்மா ஆகியோர் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago