உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அட, என்னங்க சொல்றீங்க... 12 சதவீதம் தரமற்ற மசாலாவா? பிரபல நிறுவனங்களுக்கு வந்தது சிக்கல்

அட, என்னங்க சொல்றீங்க... 12 சதவீதம் தரமற்ற மசாலாவா? பிரபல நிறுவனங்களுக்கு வந்தது சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: பிரபல நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 12 சதவீத மசாலாப் பொருட்கள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கட்டுப்பாடு

மசாலாப் பொருட்கள் விற்பனையில் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களாகும். சமீப காலமாக இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரிட்டன், நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டன. குறிப்பாக, ஹாங்காங் இந்த நிறுவனங்களின் மசாலப் பொருட்களின் தயாரிப்புக்கு தடை விதித்து விட்டது.

சோதனை

இதனால், இந்த தயாரிப்புகள் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில், எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் 4,054 மாதிரிகளை எடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சோதனைக்கு அனுப்பியது. கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 12 சதவீதம் மாதிரிகள், அதாவது 474 மாதிரிகள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கம்

இதனிடையே, தங்களின் தயாரிப்புகள் தரமானவை என்றும், பாதுகாப்பானவை என்றும் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.

நடவடிக்கை

மாதிரிகளின் சோதனை விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்காத இருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை மதிப்பு

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 8.75 லட்சம் கோடிக்கு அதிகமான சந்தை மதிப்பை கொண்ட மசாலப் பொருட்கள், கடந்த மார்ச் வரையிலான நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.3.75 லட்சம் கோடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2024 14:10

நான் ஆச்சி மசாலா என்றோரு மசாலாவை வாங்குவதையே நிறுத்தி விட்டேன்


ஸ்ரீ
ஆக 19, 2024 13:03

ஆச்சி, ஆத்தா, பாட்டி பெயரில் தமிழகத்தில் வரும் மசாலாக்கள் எந்த லட்சணமோ


angbu ganesh
ஆக 19, 2024 12:31

நாக்கை கட்டு படுத்துங்கள் அவனுங்க டேஸ்டுக்காக கண்டடையும் பயன் படுத்தறானுங்க


Sivagiri
ஆக 19, 2024 12:26

மிக மிக அத்தியாவசிய தேவை - மற்றும் ஆரோக்கிய பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது - - தேவையே இல்லாத உடலுக்கு முழுக்க முழுக்க தீங்கு விளைவிக்கும் பொருள்களை அமேரிக்கா ஏற்றுமதி செய்கிறது - குளிர்பானங்கள் , அமெரிக்கர்களால் விரும்பப் படாத கோழி கால்கள் , அழிவு ஏற்படும் ஆயுதங்கள் , அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பே , வழக்கொழிந்து போன கருவிகள் இயந்திரங்கள் - - -


பெரிய ராசு
ஆக 19, 2024 11:59

தயவு செய்து அணைத்து மசாலா தயாரிப்புகளையும் புறக்கணியுங்கள் , வீட்டு தயாரிப்பு மற்றும் உணவுகளை உண்டு நலமுடன் வாழ்வீர்கள்


Amsi Ramesh
ஆக 19, 2024 11:58

முதலில் இந்த பூச்சி மாலா கம்பெனியை சோதிங்க எஜமான் ஓவர் பீல்டப் கொடுக்கிறான்


கூமூட்டை
ஆக 19, 2024 11:57

கலப்படம் செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருபவர் சந்ததிகள் மற்றும் உறவினர்கள் அதைத் தான் சாப்பிட வேண்டும் என்று கலப்படத்தை செய்பவர்கள் சிந்திக்க வேண்டும்


Gokul Krishnan
ஆக 19, 2024 11:37

இதை போல் அமெரிக்கா நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆன கோக் பெப்சி கே எப் சி பீட்ஸா ஹட் டோமினோஸ் போன்றவை அமெரிக்காவில் உள்ள பொருளுக்கும் இங்கு உள்ள பொருளுக்கும் தரம் வித்தியாசம் இருக்கும் ஆனால் அதை நாம் பெரிதுபடுதுவது கிடையாது அது என்ன விலை என்றாலும் வாங்கி தின்போம்


DINAGARAN S
ஆக 19, 2024 10:50

ஐயா நான் எந்த நிலையிலும் இந்த மாதிரி மசாலா வகைகளை வாங்குவது இல்லை. எல்லாமே தரமற்றது தான்


Naga Subramanian
ஆக 19, 2024 10:48

மஞ்சள் பொடியில் மரத்தூளை மற்றும் மிளகாய் தூளில், செங்கற்பொடியை அதிகமாக கலந்து விற்கிறார்கள். அதானியை குறை கூறிக்கொண்டு, உள்ளூர் களவாணிகள் செய்யும் அட்டகாசங்கள் இவை. ஆகையால், நாங்கள் எங்கள் வீட்டிலேயே செய்து உபயோகிக்கிறோம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை