உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.20 லட்சம் கோடி மதிப்பில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு கண்டுபிடிப்பு

ரூ.1.20 லட்சம் கோடி மதிப்பில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு கண்டுபிடிப்பு

புதுடில்லி: ஜி.எஸ்.டி., யில் உள்ளீட்டு வரிப்பயன் மோசடி யால், கடந்த 2020ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை 'ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம்' கண்டுபிடித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

போலி நிறுவனங்களை கண்டுபிடிக்க, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நாடு முழுதும் கடந்த ஆகஸ்ட் 16 முதல், சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த சோதனைகள் நடைபெற உள்ளன. வரி ஏய்ப்பு நிறுவனங்களை கண்டுபிடித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, அரசின் வருவாயை பாதுகாப்பதே இந்த சோதனையின் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஆக 22, 2024 08:32

கோவிட் காலகட்டத்தில் வரி ஏய்ப்பு நடந்திருந்தால் அதை பெரிது படுத்தாதீர் .....


அப்பாவி
ஆக 22, 2024 07:45

டிஜிட்டல் உலகில் ஈசியா ஏமாத்துறாங்க. நம்ம ஜீ யோட சாமர்த்தியம். இதையே உல்ச்குக்கே எடுத்துக்கிட்டு போறாங்க.


N.Purushothaman
ஆக 22, 2024 09:11

டிஜிட்டல் உலகினால் தான் ஏமாத்தறவங்களை எளிதில் கண்டுபுடிக்கிறாங்க ....நீங்க என்னடான்னா வேற மாதிரி மாவு அரைக்கறீங்க


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 14:21

டிஜிட்டல் இல்லா வேட் வரி காலத்தில் வரி ஏய்ப்பு கள் கண்டுபிடிக்க முடியாமலே போய் விட்டது. அட்லீஸ்ட் இப்போது எத்தனை ஏமாற்றினார்கள் என்றாவது தெரிந்தது. இனி இது நடவா வண்ணம் நடவடிக்கை எடுக்க வழிவகையாவது செய்ய முடியும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வேட்டில் விளையாடிவிட்டு இப்போது ஜிஎஸ்டி மோடியை குறை கூறி மீண்டும் வேட்வர பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்கு வாக்கு சேகரித்து கொண்டுள்ளார் இன்னும் மனம் தளராமல் எப்படியாவது வேட் வந்து விடும் என்ற நம்பிக்கையுடன்.


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:15

கணனிமயமாக்கியத்தில் இது போல எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஆகையால் பலர் சிக்குவார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி