உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிட்காயின் முறைகேடு வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது

பிட்காயின் முறைகேடு வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது

பெங்களூரு; 'பிட்காயின்' முறைகேடு வழக்கில், சி.சி.பி. இன்ஸ்பெக்டர் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.பெங்களூரு, ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 27. கடந்த 2020ல் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில், குமாரசாமி லே - அவுட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அரசின் இணையதளத்தை முடக்கி, அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவர் சி.சி.பி. எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அவர்கள் நடத்திய விசாரணையின்போது, 'பிட்காயின்' முறைகேடு வழக்கிலும் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான 31 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், பா.ஜ. தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பிட்காயின் முறைகேடு வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணைக்கு குழுவுக்கு மாற்றியது.எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், பிட்காயின்களை சேதப்படுத்தி, சாட்சியங்களை அழிக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக எஸ்.ஐ.டி., அளித்த புகாரில், சி.சி.பி., போலீசார் சிலர் மீது, காட்டன்பேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.இந்நிலையில், ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, பிட்காயின் மூலம், சி.சி.பி., இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பாபு, 48, என்பவர் தனது வங்கிக்கணக்கிற்கு 3 லட்சம் ரூபாய் மாற்றியதும், இதற்கு சைபர் நிபுணர் சந்தோஷ், 45, உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை