மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
9 hour(s) ago | 8
பெலகாவி : பள்ளி கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்து வந்த நிலையில், இரண்டு கழிப்பறையை, 350 மாணவ - மாணவியர் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.பெலகாவி நகரை ஒட்டி உள்ள கங்க்ராலி குர்தா கிராமத்தில் அரசு கன்னட உயர்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது, இப்பள்ளியில் 16 வகுப்பறைகள், 10 ஆசிரியர்கள் உள்ளனர். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 354 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் போதிய கழிப்பறைகள் இல்லாததால் ஒருபுறம் மாணவியரும், மறுபுறம் மாணவர்களும் வரிசையில் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதுகுறித்து எஸ்.டி.எம்.சி., என்ற பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு தலைவர் விநாயக் கோல்கரா கூறியதாவது:மற்ற பள்ளிகளை ஒப்பிடும்போது, எங்கள் பள்ளி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 354 மாணவர்களுக்கு இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.கூடுதல் கழிப்பறைகள் கட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த பயனும் இல்லை. இதனால் குழந்தைகள் வகுப்புகளை முடித்துவிட்டு, அரைமணி முதல் ஒரு மணி நேரம் கழிப்பறை செல்ல வரிசையில் நிற்கின்றனர்.இதற்கு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். கழிப்பறை கட்டித்தருவதாக கூறியுள்ளனர். மாணவர்கள் கழிப்பறைக்காக இங்கு அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. எனவே, விரைவில் கட்டிக்கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும்.மகாதேவ் அதானி,பள்ளி தலைமை ஆசிரியர்கழிப்பறை பிரச்னை குறித்து கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தி உள்ளேன். இரண்டு கூடுதல் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன்.மோகன் குமார்,கூடுதல் பொறுப்பாளர்,கல்வி துறை
5 hour(s) ago
5 hour(s) ago
9 hour(s) ago | 8