உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமராக ராகுல் தான் என் சாய்ஸ்: கார்கே வைத்தார் ஐஸ்

பிரதமராக ராகுல் தான் என் சாய்ஸ்: கார்கே வைத்தார் ஐஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ.,வை தோற்கடித்து ராகுல் பிரதமராக வர வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும், பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் விரும்பியதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலின் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1) நடக்க உள்ளது. அதில் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யாரென அறிவிக்கவில்லை. இதற்கிடையே இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்காக டில்லி வருமாறு, 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாளை காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் கார்கே அளித்த பேட்டி: இந்த தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் நாட்டின் பிரதமராக பதவியேற்பார். அவர் பிரதமராக வர வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து போட்டியிட்டோம். தற்போது தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு, ஒன்றிணைந்து பிரதமரை தேர்ந்தெடுப்போம். பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ராகுலுக்கு பிரசார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். ஏனெனில் அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அதனால் பிரியங்கா போட்டியிட முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Narayanan
ஜூன் 03, 2024 14:29

இந்த உரை ராகுலின் தேர்வே இல்லை. அதனால்தானே முதலிலேயே பை பை, குட் பை, டாட்டா, கயா என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டார்.


tmranganathan
ஜூன் 02, 2024 07:27

அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா. ராகுல் குடும்பத்துடன் இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ஓடிவிடுதல் நல்லது. மக்கள் காங்கிரெஸ்ஸை கலைக்க சொல்லிவிட்டனர்.


Kannan
ஜூன் 01, 2024 16:48

தலித் என்பதால் தகுதியுள்ள கார்கேவை நிறுத்தி வேறு ஒருவரை CM ஆக நிறுத்தியது இந்த குடும்பம் .கர்கேவே நல்ல ஒரு PM வேட்பாளர் .ராகுலை போய் முன்மொழிகிறார் .


nizamudin
ஜூன் 01, 2024 15:52

மக்களின் ஆவல் அதை சொல்கிறார்


R Kay
ஜூன் 01, 2024 17:53

பெரும்பான்மையினர் ஊழலில் திளைத்த குடும்ப ஆட்சிகளை மற்றும் வாரிசுகளை வெறுக்கின்றனர். கொத்தடிமைகள் மட்டுமே வாரிசுகளுக்கு சொம்பு தூக்குவார்கள்.


vijay
ஜூன் 01, 2024 14:52

எங்க இணைஞ்சீங்க? கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் -இங்கேயே உண்டியல், துடைப்பம். நாடக சகோதரி அவிங்க எல்லாம் காங்கிரஸுக்கு எதிரேதான் நின்னு போட்டியிட்டாங்க. ஏன்யா இப்படி வாயை தொறந்தாலே பொய்யா சொல்லுறீங்க.


கடுகு
ஜூன் 01, 2024 11:54

ஏன் எங்க உதயநிதியை போட கூடாது?


S.Govindarajan.
ஜூன் 01, 2024 10:47

பக்கத்து இலை பாயசம்


Aroul
ஜூன் 01, 2024 08:45

அப்போ ஸ்டாலின் பிரதமர் இல்லையா?


Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:44

ஸ்டாலின், தமிழ் நாட்டுக்கு பிரதமர்..


Narayanan
ஜூன் 03, 2024 14:31

ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் பிரதம மந்திரி.


va.sri. nrusimaan
ஜூன் 01, 2024 07:40

veyra yaaru payraiyaavadhu sollittu, vaazhkkai nadaththa mudiyuma?


R.Varadarajan
ஜூன் 01, 2024 03:50

கார்கே சொல்கிராரோ ‘ சார்’ நான் அடிமையாக இருக்கிரேன்-சிலேவ் ஐ ரிமெய்ன்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி