உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்குது": தேர்தல் கமிஷனிடம் காங்,, புகார்

"ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்குது": தேர்தல் கமிஷனிடம் காங்,, புகார்

புதுடில்லி: ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்கிறது என தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்கிறது என தேர்தல் கமிஷனை காங்கிரஸ் கட்சி நாடியுள்ளது. இது தொடர்பாக, காங்., மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதற்கான காரணம் என்ன?. இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம். மதியத்திற்கு பிறகு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் முடிவுகள் அப்டேட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி