உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செங்கல் தொழிற்சாலையில் சிக்கிய 8 அடி மலைப்பாம்பு

செங்கல் தொழிற்சாலையில் சிக்கிய 8 அடி மலைப்பாம்பு

பெங்களூரு: நெலமங்களாவின், ராயரபாளையாவில், செங்கல் தொழிற்சாலையில் புகுந்த எட்டு அடி நீள மலைப்பாம்பை, பாம்பு வல்லுனர் மீட்டு வனத்துறையில் ஒப்படைத்தனர்.பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், ராயரபாளையாவில் பிரதாப் என்பவருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலை உள்ளது. இவரது தொழிற்சாலைக்குள், நேற்று முன் தினம் மாலை, மலைப்பாம்பு புகுந்தது. ஊழியர்கள் அச்சமடைந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு பிடி வல்லுனர்கள் ஷியாம், மனு அக்னி, சேத்தன் நீண்ட நேரம் போராடி, 8 அடி நீளமான மலைப்பாம்பை பிடித்தனர். தேவராயனதுர்கா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.திறந்த வெளிப்பகுதிகளில், மலைப்பாம்புகள் தென்படுவது அபூர்வம். செங்கல் தொழிற்சாலையில் உள்ள நாயொன்று குட்டி போட்டுள்ளது. இதை தின்பதற்காக மலைப்பாம்பு வந்திருக்கலாம்.'தொழிற்சாலையின் பின்புறம், ராமதேவர மலையின் வனப்பகுதி உள்ளது. அங்கு அவ்வப்போது மலைப்பாம்பு தென்படும். அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம்' என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை