உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு : பிரதமர்

வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு : பிரதமர்

புதுடில்லி: அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன். வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு என பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி செய்தி சேனலான நியூஸ் 18 குழுமம் சார்பில் ‛‛எழுச்சி இந்தியா'' (ரைசிங் பாரத் ) என்ற தலைப்பில் , நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியது,* 2019-ல் இந்தியாவின் எழுச்சியை உலக நாடுகள் கண்டன.* ரைசிங் பாரத் என்பது அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு என்பதன் அர்த்தம். * வளர்ச்சி மற்றும் அமைதி நிலவிய நாட்டை பயங்கரவாதிகள் அழிக்க நினைத்தனர்.* அடுத்த அரசை தீர்மானிப்பதில் 97 கோடி மக்களின் பங்கு உள்ளது.* இந்த தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் 2 கோடி உள்ளனர்.* இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் மிரட்டலாக அமைந்தனர்.* 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் சொந்தமானது.* என் மீது 100 அவதூறுகள் வைத்தாலும் என்னை பின்னோக்கி தள்ள முடியாது. அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்.* இந்தியாவின் ஏற்றுமதி 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சர்யத்துடன் வியந்து பார்க்கின்றன.* தேசமே முதலில் என்ற அடிப்படையில் பா.ஜ., செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு* எனது மூன்றாவது ஆட்சி காலத்தில் அதிகமான மைல்கல்கள் எட்டப்படும். * உலகிலேயே மிகவும் இளைமையான நாடாக இந்தியா உள்ளது.* தங்களுக்கு முந்தைய ஆட்சியில் பொய்களே நிரம்பி இருந்தன.* ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.* ஊழலை ஒழிக்க ஆன்லைன் டெண்டர் முறையை அமல்படுத்தினோம். * 2014-ல் மிகவும் பின்தங்கியிருந்த தேசத்தை மீட்டெடுத்தோம்.* மக்களுக்கானவர்களே அரசு அதிகாரிகள். 2014-க்கு முன்பு அரசியல்வாதிகளுக்காகவே அதிகாரிகள் செயல்பட்டனர்.* அரசு அதிகாரிகள் சமானிய மக்களுக்கு உழைக்க வேண்டியவர்களே.* ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களின் பதவிகாலம் முடிவடைந்தது.* எதிர்கட்சிகளிடம் குவியல் குவியலாக பணம் சிக்குகிறது.* வாழ்க்கையில் ஒரு ஊழல் பகுதி என ராஜிவ் கூறினார்.* ஊழல் குறித்த மக்களின் எண்ண ஓட்டத்தை நாங்கள் மாற்றினோம்.* பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்துள்ளோம். * சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் அல்ல.* ஏழை மக்களிடமிருந்து உணவு, நலத்திட்டங்கள், உதவிகள் திருடப்பட்டன. * ஏழை மக்களுக்கு சுத்தமான குடிநீரும், மருத்துவ வசதியும் மறுக்கப்பட்டன. வங்கி சேவைகள் கிடைக்காத நிலையே இருந்தது. * 2019-ல் புதிதாக 5000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. மோடி உத்தரவாதத்திற்கு விளம்பரம் தேவையில்லை.* நடுத்தர மக்கள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. * நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை சென்று சேர்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
மார் 20, 2024 23:17

கோபாலபுரம் குடும்ப வளர்ச்சியே எங்கள் இலக்கு - திமுக அல்லக்கைகள்


venugopal s
மார் 20, 2024 22:30

தேர்தல் நேர பேச்சில் மட்டுமே தேசத்தை வளர்க்க முடியாது, அதை கொஞ்சம் செயலில் காட்டுங்கள் பிரதமர் அவர்களே!


Varadarajan Nagarajan
மார் 20, 2024 22:15

மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியை இந்தியர்கள்மட்டுமல்ல உலகநாடுகளும் வியந்து நோக்குகின்றது. இந்தியர்களும் நமது தேசமும் உலக அரங்கில் மரியாதையுடன் நிமிர்ந்து நிற்கின்றது. உண்மையான வளர்ச்சியை பார்க்க விரும்பாத சிலரும் சில அரசியல் கட்சிகளும் வெளிநாடுகளுக்கு விலைபோய் நமது பிரதமரை மட்டுமல்ல தனது தாய் நாட்டையும் வெளிநாடுகளில் அந்நியர்களுடன் மோசமாக விமர்சிக்கின்றன. நமது தேச நலனுக்காக மோடியைப்போல வேறு எவரும் இதுபோல் உழைத்ததில்லை. இந்த வளர்ச்சி மேலும் தொடரவும் மேலும் உலக அரங்கில் நாம் வளர்ந்த நாடாக விளங்கவும் அவரது தலைமையில் மீண்டும் ஒருமுறை ஆட்சி அமைவது அவசியம்.


Oviya Vijay
மார் 20, 2024 22:13

எலெக்ஷனுக்கு நமக்கு ரொம்ப டைம் இல்லை... அதுக்கு முன்னாடி நமக்கு பெரிய பெரிய வேலையெல்லாம் தலைக்கு மேல கெடக்கு... எந்த தொகுதியிலயும் பிஜேபி-ஐ நோட்டாவ தாண்ட விடக்கூடாது... சும்மா டைம் வேஸ்ட் பண்ணாம கஷ்டப்பட்டு வேலை பார்க்கணும்... நமக்கு டார்கெட் நோட்டா நோட்டா நோட்டா... பிஜேபி vs நோட்டா... அம்புட்டு தான்...


Sekar MAHALINGAM
மார் 20, 2024 21:26

Remember, it's a very resourceful nation, it will grow autonomous, regardless of who is the driver.


வேங்கடசுப்பிரமணியன்
மார் 20, 2024 21:14

சதா தேசத்தை அதன் வளர்ச்சியை மட்டுமே சிந்திக்கும் ஓர் ஒப்பற்ற மனிதர்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ