உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் துாக்கிட்டு தற்கொலை கணவர் மீது கொலை புகார்

பெண் துாக்கிட்டு தற்கொலை கணவர் மீது கொலை புகார்

மாண்டியா: குடும்ப தகராறில், பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாண்டியா டவுன் நேருநகரை சேர்ந்தவர் சித்தராஜ், 38. இவரது மனைவி பத்மா, 36. இவர்கள் இருவரும், 13 ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்தனர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கணவன், மனைவி இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. மனம் உடைந்த பத்மா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி அவரது குடும்பத்திற்கு, சித்தராஜ் தகவல் கொடுக்கவில்லை. பத்மா இறந்த தகவல் அறிந்ததும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனை முன் குவிந்தனர்.பணத்திற்காக பத்மாவை கொன்று, துாக்கில் தொங்கவிட்டு, தற்கொலை நாடகம் ஆடுவதாக, சித்தராஜ் மீது மாண்டியா கிழக்கு போலீசில் புகார் செய்தனர். சித்தராஜிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி