உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி செலவாகும் ஒரே தேர்தல் ----

15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி செலவாகும் ஒரே தேர்தல் ----

புதுடில்லி, 'லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாங்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 10,000 கோடி ரூபாய் தேவைப்படும்' என, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். இந்தக் குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று வருகிறது. பொதுமக்களும் 10 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கடந்த 5ம் தேதி இந்தக் குழு கேட்டுக் கொண்டது. அதுமட்டுமின்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஐந்து பேரின் கருத்துக்களை கேட்டு இந்தக் குழு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் செலவாகும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் மட்டுமே. எனவே மூன்று முறை மட்டுமே அவற்றை சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும்.இதனால், 15 ஆண்டு களுக்கு ஒரு முறை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டுமே 10,000 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு நாடு முழுதும் 11.80 லட்சம் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்க வேண்டிஉள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால், இரண்டு வகையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை