உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 32 வார கருவை சுமக்கும் 15 வயது சிறுமி: அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

32 வார கருவை சுமக்கும் 15 வயது சிறுமி: அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, 32 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் 15 வயது சிறுமியின் கரு கலைப்பு தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 'கரு கலைப்பு பெண்ணின் முடிவுக்குட்பட்டது' என தீர்ப்பு அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15வயது சிறுமியின் 32 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறுமி தனது தாய் மாமா வீட்டில் வசித்து வந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சேகர் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:கருவை சுமந்து குழந்தையை பெற்று எடுப்பது அல்லது கருவை கலைப்பது சிறுமியின் முடிவை சார்ந்தது. கருவை சுமந்து குழந்தையை சிறுமி பெற்று எடுத்த, பின் அக்குழந்தையை தத்து கொடுக்க விரும்பினால், சிறுமி மற்றும் குழந்தையின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். குழந்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் சிறுமியின் கருவை கலைத்தால், ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இறுதியில் சிறுமியின் பெற்றோரும் கர்ப்பத்தைத் தொடர ஒப்புக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தத்வமசி
ஜூலை 28, 2024 08:55

பரவாயில்லையே குழந்தை பிறப்பதற்கு முன்னமாவது எதோ ஒரு தீர்ப்பை வழங்கிநீர்களே இல்லையென்றால் அந்த தீர்ப்பை குழந்தையே கேட்க வேண்டி இருக்கும். வலிமை உள்ளவர்களுக்காக இரவிலும் விடுமுறை நாட்களிலும் கூட விசாரணை நடைபெறும் அல்லது தீர்ப்புகள் வழங்கப்படும். அதற்காக வலிமை மிகுந்த வழக்கறிஞ்சர்கள் வரிசை கட்டி நிற்ப்பார்கள். இந்த குழந்தையும் குடும்பமும் 32 வாரத்தில் தான் நீதி என்று ஒன்று கிடைத்துள்ளது.


Bye Pass
ஜூலை 27, 2024 18:01

தீர்ப்பு தர நீதிமான்கள் எத்தனை வாரங்கள் விசாரித்து முடிவெடுத்தார்கள்


Senthoora
ஜூலை 27, 2024 19:37

ஒரு உயிர் சீரழிந்தது பத்தாது என்று, இன்னோர் உயிரை அனாதையாக இவ்வுலகுக்கு கொண்டுவர இதனை வாரங்கள், நீதிபதியின் கடமை முடிந்தது. இனி சுமப்பது யார்?


Bye Pass
ஜூலை 27, 2024 18:00

தீர்ப்பு தர நீதிமான்கள் எத்தனை வாரங்கள் விசாரித்து முடிவெடுத்தார்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி