உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்களே குட் நியூஸ்; அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்; மத்திய அரசு முடிவு

இளைஞர்களே குட் நியூஸ்; அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்; மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: அக்னிபாத் திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்னிபாத்

ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம்.

25 சதவீதம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே முப்படைகளில் பணியாற்ற தக்க வைக்கப்படுவர். எஞ்சிய 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். இந்த திட்டத்தில் சேவை நிதி, இழப்பீடு, இன்சுரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

எதிர்ப்பு

மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, ஆரம்ப நிலையில் இருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முடிவு

இந்த நிலையில், எதிர்கட்சிகளின் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கும் விதமாக, அக்னிபாத் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரிப்பு

இது தொடர்பாக சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:- அக்னிபாத் திட்டத்தின் கீழ் தற்போது வரை 25 சதவீதம் வீரர்களே தக்க வைக்கப்படுகிறார்கள். இது ரொம்ப குறைவு என்பதால், இனி 50 சதவீத வீரர்களை தக்க வைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வீரர்களுக்கான ஊதியம் மற்றும் வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்புசாமி
செப் 05, 2024 23:00

சீக்கிரம் 100 சதவீதம் வீரர்களும் தக்க வைக்கப் படுவார். இல்லேன்னா எப்புடி 2 கோடி வேலை கோடி வேலை குடுக்கறது?


தாமரை மலர்கிறது
செப் 05, 2024 18:52

அக்னிபாத் திட்டம் மிகவும் அருமையான திட்டம். எந்தவித மாற்றமும் தேவை இல்லை. இருபத்தைந்து சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக ஆள் குறைப்பு செய்திருக்க வேண்டும். ராணுவத்திற்கு தற்போதைக்கு தேவை அதிநவீன ஸ்வரம் ட்ரான் மற்றும் மிஸைல் மற்றும் போர் விமானம், நீர் மூழ்கி கப்பல், சிறுசிறு ட்ரான் கப்பல்கள் தான். ராணுவம் பழையமாதிரி பீரங்கி மற்றும் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இப்போது சண்டை கிடையாது. மக்களை குஷிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் வலையில் மத்திய அரசு விழுந்துவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல.


abdulrahim
செப் 05, 2024 15:28

எப்பா சங்கிகளா கொஞ்சமாச்சும் நியாயமா எழுந்துங்க, அரசு எதை அறிவித்தாலும் இப்படியா ஜால்றா போடுவிங்க ?


சிவம்
செப் 05, 2024 17:06

ராணுவத்திற்கு ஆதரவாக பேசினால் ஜால்ராவா. அப்படியே ஆதரவாக பேசினால் நீங்க பதற்ரீங்க...


Sivakumar
செப் 05, 2024 17:29

ராகுலும் தான் ராணுவத்துக்கு சாதகமா பேசினார். அவர் பேச்சை நீங்கள் தாறுமாறா எதிர்த்தீர்களே


Deva Deva
செப் 05, 2024 18:43

நீங்க ஏன் அரசு எத செஞ்சாலும் குத்தம் சொல்லிகிட்டே இருக்கிறீங்க...


இறைவி
செப் 05, 2024 15:21

திரு ஆரூர் ரங்க மன்னாரே, அகனிபாத் திட்டமே, அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய திரு நாட்டில் தேவைப் படும் நேரத்தில் தேவையான எண்ணிக்கையில் இராணுவ வீரர்கள் வேண்டும் என்பதற்காகத்தான். போர் என்றால் அவர்களுக்கு அவசர கதியில் இராணுவ பயிற்சி அளிக்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் நாடெங்கும் பரவி, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மற்றும் பலதரப்பட்ட காவல் மற்றும் பாதுகாப்பு படைகளில் அவர்கள் வாழ்வாதாரத்தை கொண்டிருப்பார்கள். இவைகள் இல்லாமல் நான்கு வருடம் பயிற்சி பெற்ற வீரன் தனக்கு கிடைக்கும் தொகையைக் கொண்டு சிறு தொழில் துவங்கி பலருக்கு வேலை அளிக்கும் நிலைக்கு உயர முடியும். இவைகளை விட இராணுவ பயிற்சி பெற்ற ஒருவன் மிகுந்த நாட்டுப் பற்றுடன் இருப்பான். அத்தகைய வீரர்கள் நாடு முழுவதும் பரவி இருப்பார்கள். பிரிவினை பேசும் அரசியல் வியாதிகளால் மூளை சலவை செய்யப்படும் ஓட்டை பணத்திற்கு விற்கும் மதி கெட்ட மனிதர்கள் எண்ணிக்கை குறையும். சுதந்திர போராட்ட காலம் போல மக்களுக்கு நாட்டு பற்று மிகும். இன்று நாம் நாட்டை கபளிகரம் செய்ய நம்மை சுற்றியுள்ள நாடுகளும் வல்லரசுகளும் காத்துக் கிடக்கின்றன. மேலும் கணினி, நுண்ணறிவு, ஏவுகணை காலமாக இருந்தாலும் நாட்டிற்குள் ஊடுருவும் விஞஞானப்பூர்வமான அந்நிய சக்திகளை மோப்பம் பிடிக்க நாடெங்கும் பரவி இருக்கும் நாட்டுப் பற்றுடன் கூடிய அக்னி பாத் வீரர்கள் தேவை. அன்னியரிடம் நாட்டை விற்க காத்திருக்கும் சுயநல அரசியல் வியாதிகள் கையில் நாடு போகாமல் காத்த இறைவனுக்கு நன்றி. தத்வமசி மற்றும் பட்டினத்தார் கருத்துகள் உண்மையானவை. வரவேற்கக் கூடியவை.


சமூக நல விரும்பி
செப் 05, 2024 13:57

இந்திய ராணுவம் மிகவும் வலிமையாக இருந்தால் தான் நம்மால் நம்மை சுற்றி இருக்கும் விரோதிகளை அதாவது சீன, பாகிஸ்தான் முதலிய நாடுகளை சமாளிக்க முடியும். ஒரு. மாற்று வழி எதிர் கட்சிகள் இதை எதிப்பதால் அவர்கள் குடும்பத்தில் இருந்து கட்டாயமாக ஒருவர் இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்று கூறலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 05, 2024 13:47

மீதி 50 சதவிகித அக்னி பாத் வீரர்களை மாநில காவல் துறை மத்திய தொழில் பாதுகாப்பு படை மாநில கடலோர காவல்படை தீயணைப்பு துறை போன்ற முக்கிய காவல் துறைகளில் பணி அமர்தலாம். மாநில காவல் துறையாவது மேம்படும். சுதந்திர தினம் குடியரசு தினம் போன்றவைகளில் இராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பார்த்து விட்டு மாநில காவல் துறை அணிவகுப்பை பார்த்தால் மாநில காவல் துறை அணிவகுப்பு நன்றாகவே இல்லை. ஆகவே இராணுவ பயிற்சி பெற்றவர்களை மாநில காவல் துறையில் நியமித்தால் ஊழலும் குறைய வாய்ப்பு இருக்கும்.


Sivak
செப் 05, 2024 15:37

மாநில காவல் துறையில் நியமிக்க வேண்டும் ... கொஞ்சமாவது தேச பக்தி இருக்கும் ...


Sivagiri
செப் 05, 2024 13:24

மீதி ஐம்பது பெர்ஸன்ட் பேரை சிஆர்பிஎப் , ரயில்வே , கடலோர காவல்படை, தொழில் பாதுகாப்பு படை , போன்ற படைகளில் சேர்த்துக் கொள்ளலாம் ,


தத்வமசி
செப் 05, 2024 13:07

இந்திய ராணுவம் வலிமையுடன் இருந்து விடக் கூடாது என்பதில் காங்கிரசும் அதன் அடிவருடிகளும் முனைந்து செயல்படுகின்றனர். பல நாடுகளில் இளைஞ்சர்களுக்கு இந்த ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதை செய்ய இயலாது. ஆனால் தரமான ராணுவ வீரர்களை உருவாக்கலாம். நம்மை சுற்றி உள்ள நாடுகளில் இருந்து நமக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்பதால், உள்நாட்டில் ராணுவ பயிற்சி பெற்ற குடிமக்கள் மிகவும் அவசியம். தேவையான நேரத்தில் இவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பழங்காலம் முதற்க் கொண்டே இந்தியாவில் பழக்கத்தில் உள்ள ராணுவ முறை. ஏதாவது குற்றம் சொல்லியே ஆக வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் எதிர்கட்சிகள் நாட்டைப் பற்றி துளியாவது சிந்திக்க வேண்டும்.


S Regurathi Pandian
செப் 05, 2024 12:36

எதிர்த்துப் போராடினால்தான் மாற்றம் செய்கின்றனர். அதுவரை எவ்வளவு வேண்டுமானாலும் அடக்கலாம் என்று நினைக்கின்றனர்


sankaranarayanan
செப் 05, 2024 12:33

நல்ல முயற்சி எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துவிடலாம்


புதிய வீடியோ