உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு பகுதியில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்

வயநாடு பகுதியில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு; வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளை இன்று ராணுவ உடையில் ஆய்வு செய்தார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்.கேரளாவில் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 295-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.மீட்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று வயநாட்டில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் மீட்பு பணிகளை மலையாள நடிகர் மோகன்லால் ஆய்வு செய்தார்.அப்போது ராணுவ உடையணிந்து வந்தார். மோகன்லாலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தில் லெப்டினட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று (04.08.2024)முண்டக்ககை பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதியை ராணுவ உடையில் அவர் நேரில் பார்வையிட்டார். மீட்பு பணிகளை மேற்கொள்ள நடிகர் மோகன்லால் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். ராணுவ முகாமில் வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
ஆக 04, 2024 01:10

பாராட்டுக்கள்.


அஜய் சென்னை இந்தியன்
ஆக 03, 2024 22:55

பாராட்ட வேண்டிய விசயம். இவரை போல் 10 to 500 கோடி சம்பளம் பெறும் நடிகர்கள் குறைந்தது 1 கோடி முதல் 50 கோடி (1%) சம்பளத்தை நிதி யாக கொடுக்க பரந்த மனம் வேண்டும். ஆனால் இந்தியாவில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் பல நடிகர் நடிகைகள்.இன்னும் நிதி உதவி கொடுக்க மனம் வர வில்லை. ஆனால்.இவர்கள் நடிக்கும் படம் கேரள விலும் ஓடி கோடி கோடி சம்பாரிக்க ஆசை படுகிறார்கள்.


rao
ஆக 04, 2024 09:01

U criticise them ,but during the release of their movies, instead of boycotting, U will be the first person to book tickets online and see their movies.


Prabakaran J
ஆக 03, 2024 21:33

Real hero


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை