உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4,980 கோடி கடன் பெற வங்கிகளை நாடும் அதானி

ரூ.4,980 கோடி கடன் பெற வங்கிகளை நாடும் அதானி

புதுடில்லி: அதானி காஸ் நிறுவனம், 4,980 கோடி ரூபாய் கடன் திரட்ட, சர்வதேச வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அதானி நிறுவனம், தற்போதுள்ள கடன்களை நிர்வகிக்கும் பொருட்டு, சர்வதேச வங்கிகளிடம் இருந்து 4,980 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சில் ஈடுபட்டு வருகிறது.'அதானி டோட்டல்' நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 'தாம்ரா எல்.என்.ஜி., டெர்மினல்' நிறுவனத்தின் வாயிலாக, இந்த கடன் திரட்டப்பட உள்ளதாக தெரிகிறது. கடனுக்கான தவணைக்காலம் 3 முதல் 5 ஆண்டுகளாக இருக்கலாம். இந்த கடன் நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்படலாம்.இக்கடன்களுக்காக, 'கிரேடிட் அக்ரிகோல், டி.பி.எஸ்., வங்கி, பி.என்.பி., பரிபாஸ், மிட்சுபிஷி யு.எப்.ஜே., பைனான்சியல் குரூப், மிஷுஹோ பைனான்ஸ்' உள்ளிட்ட பல வங்கிகளுடன் அதானி குழுமம் தற்போது விவாதித்து வருகிறது.கடந்த ஆண்டு, ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பின், தங்கள் குழுமத்தின் மீதான நம்பிக்கையை, மீண்டும் முதலீட்டாளர்களிடையே மீட்டெடுக்கும் நோக்கில், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

shaha.Bi
மே 08, 2024 01:31

அடுத்த ஆண்டுகளில் பிரிட்டன் அல்லது தென் அமெரிக்காவில் தேட வேண்டி இருக்கும்


shaha.Bi
மே 08, 2024 01:26

அடுத்த ஆண்டுகளில் பிரிட்டன் அல்லது கிழக்கு அமெரிக்காவில் தேட வேண்டியிருக்கோம் இருக்கவே இருக்கு குஜராத்தில் சொந்த துறைமுகம் கிளம்ப வசதியாக இருக்கும்


MADHAVAN
மே 07, 2024 14:03

நைனார்கிட்ட இல்லாத பனாமா?


Palanisamy Sekar
மே 07, 2024 12:59

அறிவாலயத்தை நாடி இருக்கலாம் முதலீடுகளுக்கு தாராளமாக பணம் வைத்துள்ளனர் என்ன ஏதாவது வெளிநாடுகளில் அதனை கொடுப்பார்கள், முயற்சித்து பாருங்களேன்


Ramesh Sargam
மே 07, 2024 12:37

அதானி குழுமம் வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் கேட்கிறதா? அதானே ??


MADHAVAN
மே 07, 2024 12:19

எப்படியும் திருப்பி வராது


அப்புசாமி
மே 07, 2024 07:17

எந்தத் தொழிலதிபரும் சொந்தக்காசில் தொழில் பண்ண மாட்டான். கடன் வாங்கி லாபம் வந்தால் கணிசமா ஒதுக்கிக்கிக்கிட்டு ஆயிரம் லட்சம் கோடிக்கு அதிபராயிடுவான். அடுத்த தொழிலுக்கு திரும்ப கடன் வாங்குவான். ஊத்திக்கிட்டா முதலீட்டாகர்களுக்கு நஷ்டமும், மக்களுக்கு கடனும் ஏறும்.


Duruvesan
மே 07, 2024 07:55

மாறன் போல, இதை உலகுக்கு சொல்லி கொடுத்தது யார்னு நான் சொல்ல மாட்டேன்


Duruvesan
மே 07, 2024 07:57

நல்லா படி நியூஸ் என்னனு


இறைவி
மே 07, 2024 08:28

அதெப்படி அப்புசாமி? அப்படியென்றால் மாறன் சகோதரர்களும் சாராய ஆலைகளை நடத்தும் தமிழக அரசியல்வாதிகளும் சொந்தப் பணத்தில்தான் தொழில் செய்து இந்த அளவிற்கு வளர்ந்தார்களா? சொந்தப் பணம் என்றால் அவர்கள் தந்தை பாட்டன் வைத்து விட்டுப் போன தலைமுறை சொத்தா? எல்லா தொழிலதிபர்களும் தொழிலுக்கு தங்களுடைய முதலுடன் கடன் வாங்கித்தான் தொழில் செய்வார்கள். லாபத்தில் கடனை அடைப்பார்கள். அரசியல் கட்சிகளுடன் கை கோர்த்து கடன் பணத்தை பங்கிட்டுக்கொண்டு ஆட்டய போட நினைப்பவர்கள்தான் வங்கிகளின் வாராக் கடனை உயர்த்துவார்கள். மல்லையா முதலியவர்கள் அந்த கூட்டம்.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
மே 07, 2024 06:54

வெறும் வாயை மென்னுக்கிட்டு இருக்க திமுகவின் பல்லு போன பொக்க வாயன்களுக்கு இன்னக்கி அவல் கிடைத்திருக்கிறது நல்லா ஊற வச்சு அசை போட்டு மெண்டு தின்னுங்க..


மேலும் செய்திகள்





புதிய வீடியோ