மேலும் செய்திகள்
211 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு அறிவிப்பு
2 hour(s) ago | 1
டில்லியில் தொற்று பதிவு: மலேரியா அதிகம்; டெங்கு குறைவு
2 hour(s) ago
2வது டெஸ்ட்: 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி
5 hour(s) ago | 3
புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விசா சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக ஆப்கன் அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி கூறி உள்ளார்.இந்தியா உடனான வர்த்தகம் மற்றும் முதலீடுக்கான உறவை மேம்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி 5 நாள் பயணமாக புது டில்லி வந்தார். புதுடில்லியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; மருத்துவ சேவைகளுக்காக இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே விசா சேவைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எங்கள் நாட்டில் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியா வருவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிப்போம். அவர்களுக்கான வசதிகளை அளிப்பதில் தூதரகம் முக்கிய பங்கு வகிக்கும். காபூலில் உள்ள இந்திய தூதரகம் அதற்கான திட்டங்களை உருவாக்கும். வங்கித்துறையில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் இரண்டும் வர்த்தகத்திற்காக சிறப்பான சேவையை அளித்து வருகின்றன. வணிகத்திற்கு தேவையான விஷயங்களில் வெளிப்படையாகவே உள்ளோம். வங்கித்துறையில் மத்திய ஆசிய நாடுகள் உடன் நல்ல உறவை கடைபிடித்து வருகிறோம். இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே சின்ன,சின்ன சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்படும். வங்கித் துறையில் கூடுதல் வசதிகளை வழங்குவதே எங்கள் கவலையாக இருக்கிறது. அவை வேண்டும் என்று இரு தரப்பிலிருந்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி கூறினார்.
2 hour(s) ago | 1
2 hour(s) ago
5 hour(s) ago | 3