உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானப்படையில் வேலை: டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் ஆக சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி பிளஸ் 2 மட்டுமே!

விமானப்படையில் வேலை: டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் ஆக சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி பிளஸ் 2 மட்டுமே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய விமானப்படையில், டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1ம் தேதி.விமான படையில் 157 கிளர்க் (lower division clerk), 18 ஹிந்தி டைப்பிஸ்ட், 7 டிரைவர் பணியிடங்கள் என மொத்தம் 182 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி என்ன?

* கிளர்க் (lower division clerk) பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தி டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும்.* ஹிந்தி டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும்.* டிரைவர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 வருட முன் அனுபவம் கட்டாயம்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். https://indianairforce.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஆக 04, 2024 15:46

யாருக்கும் ஹிந்தி தெரியாது.. இப்போ டைப்ரைட்டிங் institute இல்லை... ஆங்கிலம் அரைகுறை... வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டியதுதான்


Kumar Kumzi
ஆக 04, 2024 13:56

எனக்கு ஹிந்தி தெரியாது போ


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 04, 2024 13:25

ஹிந்தி தெரியணும். ஓகேவா?


P. VENKATESH RAJA
ஆக 04, 2024 12:46

நான் பலமுறை இன்டர்வி அட்டன் பண்ணியும் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை