உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்தது!

டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு வந்தது. டில்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்ட போதிலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கினர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது என ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.விமானத்தில் தீ அணைக்கப்பட்டதை டில்லி விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். விமானம் தரையிறங்கிய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அண்மைக்காலமாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
ஜூலை 23, 2025 07:03

ஏர் இந்தியா வின் நல்ல பெயர் கெட்டு போய் விடும் போல் அல்லவா உள்ளது


Indian
ஜூலை 23, 2025 07:01

முறையான பராமரிப்பு இல்லை .


rajasekaran
ஜூலை 22, 2025 20:17

அரசு கையில் இருக்கும்போது ஒரு service கூட செய்து இருக்க மாட்டார்கள். இப்போது டாடா பெயர் அனாவசிமாக அடி படுகிறது.


அப்பாவி
ஜூலை 22, 2025 20:15

இருக்கவே இருக்காரு நேரு


Ramesh Sargam
ஜூலை 22, 2025 19:21

அதென்ன ஏர் இந்தியா விமானம் மட்டும் தினமும் ஏதாவது பிரச்சினையில் சிக்குகிறது.


VENKATASUBRAMANIAN
ஜூலை 22, 2025 18:58

இப்போதெல்லாம் விமானத்தில் போவதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.


புதிய வீடியோ