மேலும் செய்திகள்
அயோத்தியில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ராமர் கோவிலில் வழிபாடு
2 hour(s) ago | 6
எரிமலை வெடிப்பால் இந்தியா திரும்பிய இண்டிகோ விமானம்
5 hour(s) ago
ரூ.2.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்த ரயில்வே துறை
5 hour(s) ago
எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக, 11 வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.கிழக்கு
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி
என்ற எரிமலை, பல்லாண்டுகளுக்குப் பின் வெடித்துள்ளது. இதனால்
சாம்பல் புகை பரவி வருகிறது. பல நுாறு மைல்களுக்கு வான்வெளியில் இந்த சாம்பல் பரவியுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த பகுதியில் பறப்பதை
தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
(டிஜிசிஏ) அறிவுறுத்தி உள்ளது.இதை ஏற்று பல்வேறு விமான நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இன்றும், நாளையும் இயக்கப்பட வேண்டிய 11 விமானங்களை ரத்து செய்வதாக
ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம்
ரத்து செய்துள்ள விமானங்களின் பட்டியல் பின்வருமாறு:
நவ.,24
நேவர்க்- டில்லிநியூயார்க்- டில்லிதுபாய்- ஐதராபாத்தோஹா - மும்பைதுபாய்- சென்னைதம்மம்- மும்பைதோஹா - டில்லிநவ.,25
சென்னை - மும்பைஐதராபாத் - டில்லிமும்பை - ஐதராபாத் - மும்பைமும்பை- கோல்கட்டா - மும்பைரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்று பயண ஏற்பாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பயணிகளின் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதேபோன்று, ஆகாசா ஏர், இண்டிகோ, கேஎல்எம் நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
2 hour(s) ago | 6
5 hour(s) ago
5 hour(s) ago