உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா அபார வெற்றி

7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா அபார வெற்றி

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 லட்சத்து 44 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றார்.லோக்சபா தேர்தலின் ஓட்டுகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் விஐபி வேட்பாளராக கருதப்படும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். இவர்களின் வெற்றி ஏறக்குறைய உறுதியானாலும், ஓட்டு வித்தியாசம் யாருக்கு அதிகம் கிடைக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக அமித்ஷா 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றார். காந்திநகர் தொகுதியில் அவர் 10,10,972 ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் சோனல் ராமன்பாய் படேல் 2.66 லட்சம் ஓட்டுகளையே பெற்றார். இதன்மூலம் 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா அபார வெற்றிப்பெற்றார். இவர் கடந்த 2019 லோக்சபா தொகுதியில் இதே தொகுதியில் 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Maheswaran
ஜூன் 05, 2024 12:45

குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா???


Anantharaman Srinivasan
ஜூன் 04, 2024 22:43

எல்லோரையும் மிரட்டி பெற்ற வாக்குகள்.


பிரேம்ஜி
ஜூன் 04, 2024 21:07

வேஸ்ட்.


K.n. Dhasarathan
ஜூன் 04, 2024 20:56

ஒரு மத்திய உள்துறை அமைச்சர் அவர் சொந்த மாநிலத்தில் இது கூட எடுக்க முடியாதா ? ஆனால் வேறு மாநிலத்தில் போட்டி போடா முடியுமா ? முக்கியமாக தமிழ் நாட்டில் போட்டியிட்டால் டெபாசிட் வாங்க முடியாது , அந்த தைரியம் இருக்கா ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை