உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்: வைரலாகும் வீடியோ

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்: வைரலாகும் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி, -ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் வீடியோ இணைய தளத்தல் வைரலாகி வருகிறது.பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது. திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெறுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8oakyx1t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண அழைப்பிதழ் அட்டையில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கை உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன.இந்து கடவுள்களின் படங்களுடன் வண்ண வண்ண அட்டைகளில் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள் மற்றொரு சிறு பெட்டியில் தங்கம். வெள்ளி முலாம் பூசப்பட்ட கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவிலையுயர்ந்த பட்டு துணிகள், உலர் பழங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளனபின் கோவில் போன்றதொரு வடிவில் பெட்டி உள்ளது. அதில் ஹிந்தியில் மந்திரங்கள் ஒலியுடன், தங்க விக்ரஹம், பட்டு வஸ்திரம், வெள்ளி கோவில் விமானம் என பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண அழைப்பிதழ் சினிமா, அரசியல், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramarajpd
ஜூன் 28, 2024 00:12

பிழைப்புக்காக தமிழ்நாடு வந்த ஒருவரின் பல குடும்பங்கள் இப்போது எத்தனை கோடிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர் ??


angbu ganesh
ஜூன் 28, 2024 10:31

என்னங்க அவர் ரொம்ப ஏழைங்க பாருங்க இப்போ கூட கள்ளக்குறிச்சி சவுக்கு வெறும் பாத்து லக்க்ஷமந்தான் கொடுத்திருக்கார்


Saai Sundharamurthy AVK
ஜூன் 27, 2024 22:24

இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் இந்த அழைப்பிதழ் கொடுக்கப்படுமாம். தமிழக முதலமைச்சர் விஷ்ணு சகஸ்ரநாமம் பாட ஆரம்பித்து விட்டாராம்.


r ravichandran
ஜூன் 27, 2024 22:18

ஒரு முதல் அமைச்சர் தமிழ் நாட்டில் தனது மகளின் திருமணத்தை நாட்டின் துணை பிரதமர் தலைமையில் எத்தனை கோடி ரூபாய் செலவில் நடத்தினார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். அந்த பணம் எல்லாம் உழைப்பில் வந்ததா.


r ravichandran
ஜூன் 27, 2024 22:16

சென்ற ஆண்டு மதுரையில் நேற்று வரை பரம ஏழை ஆக இருந்த ஒரு அமைச்சர் தனது வீட்டு திருமணத்தை எவ்வளவு ஆடம்பரமாக தமிழ் நாடு வியக்கும் வகையில் நடத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 21:22

கடந்தமுறை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கே மனைவியுடன் வந்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்தார் முகேஷ் அம்பானி .... தமிழ்த்தேச மன்னருக்கு வாயெல்லாம் அந்த 32 .........


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 20:13

பல்லு இருக்கிறவர் பக்கோடா சாப்பிடுறார். அவ்வளவுதான்


Pandi Muni
ஜூன் 27, 2024 20:40

மக்கள்கிட்ட இருந்துல்ல பக்கோடாவ புடுங்கி தின்றானுங்க


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 27, 2024 20:04

நான் ஜியோ பங்குதாரர். அதாவது அவர்களின் பிசினஸ்க்கு தொடர் ஆதரவாளர். அவரை விமர்சனம் செய்யும் விஜபிகளுக்கு திருமணப் பத்திரிகை மூலம் வெகுமானம். எனக்கு ஜியோ கட்டணங்களை உயர்த்தி அவமானம். தேவுடா..க்யாரே ஹம் கோ..


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 21:21

ஜியோ ப்ராடக்ட்ஸ் ஜியோ சிம், ஏர் ஃபைபர் இவற்றைப் பயன்படுத்தச் சொல்லி உங்களை முகேஷ் அம்பானி கட்டாயப்படுத்தினாரா ????


theruvasagan
ஜூன் 27, 2024 21:38

ஜியோ செல்போன் கட்டணம் அதிரடி உயர்வு. இன்றைய தினமலர் செய்தி. நான் இதுவரை ஜியோ சேவையை உபயோகித்தது இல்லை. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகரமான திட்டங்கள். நாள் நாள் போக போக கட்டணம் ஏறு முகமாகவே இருக்கும். இந்த வியாபரத் தந்திர வலைக்குள் விழ நான் தயாரில்லை.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி