உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி: புதிய உச்சம் தொட்டு சாதனை

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி: புதிய உச்சம் தொட்டு சாதனை

புதுடில்லி: இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2,10,267 கோடி ஜிஎஸ்டியில்,https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dk4am016&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிஜிஎஸ்டி - ரூ.43,846 கோடி,எஸ்ஜிஎஸ்டி - ரூ.53,538 கோடி,ஐஜிஎஸ்டி - ரூ.99,623 கோடி, (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.37,826 கோடி அடங்கும்)செஸ் - ரூ.13,260 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,008 கோடி அடங்கும்) ஆகியவை வசூலாகி உள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் இதுவரையில் இல்லாத வகையில் அதிகபட்ச மாதாந்திர வசூலாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.அதேநேரத்தில் கடந்தாண்டு (2023) ஏப்ரல் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையை விட இந்தாண்டு கிடைத்த வருமானம் 12.40 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி வசூலான நிலையில், இந்த ஏப்ரல் மாதம் ரூ.2,10,267 கோடி வசூலாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முன்பு, ஜிஎஸ்டிக்கு பின்பு

தமிழகத்தை பொறுத்தவரை ஜிஎஸ்டி.,க்கு முன்பு கிடைத்த வரி வசூலை விட தற்போது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜி.எஸ்.டி.,க்கு முன் 2012-13 நிதியாண்டில் ரூ.25,041 கோடி, 2013-14ல் ரூ.25,875 கோடி, 2014-15ல் ரூ.27,783 கோடி, 2015-16ல் ரூ.29,786 கோடி, 2016-17ல் ரூ.31,303 கோடி வசூலானது. 2017-18 நிதியாண்டின் முதல் 3 மாதத்தில் மட்டும் ரூ.7,359 கோடியும், ஜிஎஸ்டி அமலுக்கு பின், அடுத்த 9 மாதத்தில் ரூ.24,907 கோடியும் என மொத்தம் ரூ.32,266 கோடியும் வசூலானது.ஜி.எஸ்.டி.,க்கு பின், 2018-19 நிதியாண்டில் ரூ.41,767 கோடி, 2019-20ல் ரூ.41,369 கோடி, 2020-21ல் ரூ.37,910 கோடி, 2021-22ல் ரூ.48,916 கோடி, 2022-23ல் ரூ.58,194 கோடி வசூலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Jai
மே 01, 2024 19:24

இது எல்லாம் உங்களுடைய வரிப்பணம் தான். ஆனால் நீங்கள் வாங்கிய ரூ500–னால் இந்த மொத்தமும் யாரோ திருடிக் கொண்டு போகப் போகிறார்கள்.


vadivelu
மே 01, 2024 14:17

மாநிலத்தில் கிடைத்த ஜி எஸ் டி யில் % மாநிலத்திற்கு உடனே கிடைத்து விடும் ஜி எஸ் டி இல்லாத பொது, வரி மாநிலத்திற்கு கிடைத்து வந்ததை விட இப்போது இருபது மடங்கு கிடைக்கிறதாம் அரசியலுக்காக கட்சிகள் சொல்வதை கண்ணை மூடி கொண்டு சொல்லாதீர்கள் மாநிலத்தில் உள்ள திட்டங்கள், செயல் படுத்தப்பட்ட திட்டங்களின் மதிப்பை பார்த்து மாநிலத்தின் வருவாய் இப்போது எவ்வளவு என்பதை உணருங்கள்


Indian
மே 01, 2024 14:03

அப்படியே உபி பீஹாரிக்கு கொடுத்துவிடுங்கள்


ஆரூர் ரங்
மே 01, 2024 15:51

இங்கு வசூலானது பெரும்பாலும் சென்னை கோவைப் பகுதியில் தான். மற்ற மாவட்டங்களுக்கு பிரித்துக் கொடுக்கக்கூடாது. சரியா?


திராவிட மாடல் மனித நேய மாடல்
மே 01, 2024 13:17

எல்லாமே ஏழை நடுத்தர மக்களின் கண்ணீர், GST %


N Sasikumar Yadhav
மே 01, 2024 13:44

ஏழை நடுத்தர மக்களை ஏமாற்றி ஆட்டய போடுவது திராவிட மாடல் அரசு இப்போதும் விஞ்ஞானியான ஊழலைகளை செய்யும் திராவிட மாடல்


ஆரூர் ரங்
மே 01, 2024 12:47

முன்னேறிய மாநிலம் என்றால் சராசரியை விட அதிகமாக இருக்கும். ஆனால் இப்போதும் தமிழகத்தின் மக்கள் தொகை சதவீதமும் ஜிஎஸ்டி வசூல் சதவீதமும்( ஐந்தரை) ஒன்றே. இன்னும் இந்த திராவிட மாடல் பொய்களை நம்ப ஆளிருக்கே.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை