மேலும் செய்திகள்
ஆவணங்களை மாற்றி எழுதிய தேவசம் போர்டு மாஜி தலைவர்
31 minutes ago
அபுஜா: நைஜீரியாவில், கத்தோலிக்க கிறிஸ்துவ உறைவிட பள்ளியில் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள அக்வாரா பகுதியில் செயின்ட் மேரீஸ் என்ற தங்கும் வசதியுடன் கூடிய கத்தோலிக்க பள்ளி செயல்படுகிறது. யெல்வா மற்றும் மோக்வா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை அருகே உள்ள இந்த மேல்நிலைப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் விடுதி கட்டங்கள் உள்ளன. நேற்று காலை ஆயுதம் தாங்கிய கும்பல் பள்ளிக்குள் திடீரென புகுந்தது. அவர்கள் அங்கிருந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கி சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை கடத்தி சென்றனர். இந்த தகவலை நைஜர் மாநில அரசு செயலர் அபுபக்கர் உஸ்மான் உறுதி படுத்தியுள்ளார். எனினும் எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இது குறித்து அப்பகுதி 'டிவி' வெளியிட்ட செய்தியில் பள்ளியில் படித்த, 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட, 52 மாணவர்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடத்தல் சம்பவத்தை அடுத்து, பள்ளியை சுற்றி ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப் பட்டனர். முன்னதாக கடந்த, 17ல் கெப்பி மாநிலத்தில் உள்ள மகா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கி, 25 மாணவியரை கடத்தி சென்றது. இந்த இரு தாக்குதலுக்கும் எந்த கும்பலும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
31 minutes ago