உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமேதியில் காங்., அலுவலகம் மீது தாக்குதல்

அமேதியில் காங்., அலுவலகம் மீது தாக்குதல்

அமேதி: உ .பி., மாநிலம் அமேதியில் உள்ள காங்., அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேரு காலம் முதல் காங்கிரசில் அவர்களின் குடும்பத்தினரே அமேதியில் போட்டியிட்டு வந்தனர். பல ஆண்டுகளுக்குப்பின் இந்திரா குடும்பத்தினரை தவிர்த்து இந்த தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். சோனியாவுக்கு நெருக்கமானவர் இவர். இங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அமேதியில் உள்ள காங்., அலுவலகம் தாக்கப்பட்டது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடைக்கப்பட்டன. இதில் காங்., தொண்டர்கள் சிலர் காயமுற்றனர். இது பா.ஜ., வின் அராஜகம் என காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா கண்டித்துள்ளார். தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என்றும் அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Krishnamoorthi
மே 06, 2024 14:01

ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் பலகீனமாக உணரும் நேரம் இப்படி ஒரு தாக்குதலை அவர்களே செய்து விட்டு இவ்வாறு அறிக்கை விடுவார்கள் பலமாக உணரும் நேரம் தொண்டர்களை கன்னத்தில் ஆராய்வார்கள்


பாரதி
மே 06, 2024 11:56

ஆமாம் அது மட்டுமா ....


vijay
மே 06, 2024 10:07

நிச்சயம் காங்கிரஸின் வேலைதான் சந்தேகமே இல்லை இவ்வளோ கேவலமான கட்சியை நாடு பார்த்ததில்லை பொய்களின் கட்டமைப்பு காங்கிரஸ்


ராஜவேல்,வத்தலக்குண்டு
மே 06, 2024 09:59

புள்ள பூச்சிய எவனாவது அடிப்பானா பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க?


Saai Sundharamurthy AVK
மே 06, 2024 08:52

காங்கிரஸின் நாடகம் புரிகிறது. பாஜக மேல் பழி போட்டு ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை