மேலும் செய்திகள்
பிரதமர் மோடி, ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஒரே காரில் பயணம்
2 hour(s) ago | 4
l கர்நாடகத்தில் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கும் 'சக்தி' திட்டத்தில் இதுவரை 155 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதற்காக, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.l உடுப்பி, சிக்கபல்லாபூர், நெலமங்களா, மடிகேரி, மதுகிரி, ஹன்சூரில் தானியங்கி ஓட்டுனர் பயிற்சி தடம் அமைக்க, 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு. விதிகளை மீறும் வாகனங்களை நிறுத்த, தேவனஹள்ளி, துமகூரு ஆகிய இடங்களில் தனி இடங்கள் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடுl அனைத்து போக்குவரத்து வாகனங்களின் பரிசோதனை சான்றிதழ்களை புதுப்பிக்க விரும்புவோருக்காக, பொது, தனியார் கூட்டமைப்புடன் 32 இடங்களில் தானியங்கி சோதனை மையம் அமைத்து, பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும்l போக்குவரத்துத் துறையில் அனைத்து வகை வாகனங்கள் பதிவு, டிஜிட்டல் ஆவணங்களாக்கப்படும். நடப்பாண்டு பெங்களூரு சென்ட்ரல், பெலகாவி, மங்களூரு, பல்கியில் சோதனை முறையில் பதிவு செய்யப்படும்.
2 hour(s) ago | 4