உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ஒளிர்கிறது: இப்போதே தீபாவளி போல ஜொலிக்கிறது

அயோத்தி ஒளிர்கிறது: இப்போதே தீபாவளி போல ஜொலிக்கிறது

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22 அன்று நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் கோவிலின் இரவு நேர புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.கோவில் வாசலில் கருடன், அனுமன், யானை, ஜடாயு சிலைகள் மற்றும் ராமர் கோவிலின் உட்புறம், வெளிப்புறம், தரைதளம் என எல்லாமே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.இதனால் இரவு நேரத்தில் கோவில் ஜொலிக்கிறது. ராமர் கோவிலின் அழகிய வேலைப்பாடுகள், அதன் நேர்த்தி அழகை எல்லாம் இந்த மின்விளக்கின் ஒளி மேலும் அதிகரித்துக் காட்டுகிறது.ராம் லல்லா பிராணபிரதிஷ்டை ஜனவரி 22ம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும். ஆனால், கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16ம் தேதியே துவங்கி விடும். ஸ்ரீ ராமர் சிலையின் நீளம் மற்றும் நிறுவப்பட்ட உயரம், இந்தியாவின் பிரபல விண்வெளி விஞ்ஞானிகளின் ஆலோசனையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி, சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 9ம் தேதி, சூரிய பகவான் மதியம் 12:00 மணிக்கு ராமரின் நெற்றியை தன் கதிர்களால் தொடுவார் என்று ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் கூறியுள்ளார்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள 42 பூங்காக்களும் வரும் நாட்களில் சூரிய சக்தி மூலம் ஒளிரும்.பிரமாண்டமான ராமர் கோவில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிகழ்வு, மக்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இப்போதே தீபாவளி போல அயோத்தி ஜொலிப்பதை பார்த்து அனைவரும் வியக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

T.sthivinayagam
ஜன 14, 2024 23:12

அயோத்தி ராமர் கோவில் கேப்டன் மில்லர் கதை போல் ஆகாமல் இருந்தால் நல்லது என்று இந்தியர்கள் கருதுகின்றனர்


Seshan Thirumaliruncholai
ஜன 14, 2024 21:30

சமூக நீதி கருத்துதான் ராமாயணம். பிராமணன் வசிஷ்டர் வேடுவன் குகன் வானரம் சுக்கிறவன் விலங்கு கரடி பட்சி ஜடாயு அரக்கன் விபீஷணன் இவர்களுக்கு இடையே உள்ள இணக்கம்தான் சமுதாயம்.


mrsethuraman
ஜன 14, 2024 21:27

பூலோக வைகுண்டம் .


hari
ஜன 14, 2024 21:15

our favourite. bluffer is rajan... no one understand his comments


பைரவர் சம்பத் குமார்
ஜன 14, 2024 20:51

பரந்தாமன் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்


Bala
ஜன 14, 2024 18:42

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு ஒளிர்வது ஆனந்தமாகவும், கோலகலமாகவும் இருக்கிறது. ஆனாலும் இது இராமபிரான் கோவில் கும்பாபிஷேகம். அதில் பக்தியே பிராதனமாக இருக்க வேண்டும். ராம் ராம்.


திகழ்ஓவியன்
ஜன 14, 2024 18:56

எல்லாம் தமிழர்களின் வரிப்பணம் , நாம் 100 வரி செலுத்தினால் வருவது 29 அனால் UP 100 க்கு 330 போகுது அப்புறம் என்ன அவன் அடுத்தவன் வீடு காசு என்ன கவலை ராக்கெட்டே விடுவான்


g.s,rajan
ஜன 14, 2024 13:06

பி.ஜே.பி யினரின் இந்த அல்லோகலத்தில் அந்த ராமரே இந்தியாவில் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.....


Pandi Muni
ஜன 14, 2024 17:31

வாங்கின காசுக்கு மேலயே கூவுறயே


g.s,rajan
ஜன 14, 2024 12:49

மின்சாரம் ஆச்சே ,மிளிராமல் இருக்குமா ...???


Las Theodore
ஜன 14, 2024 12:33

0 ...


g.s,rajan
ஜன 14, 2024 12:32

மத்திய அரசில் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் இந்தியாவை சூப்பராக மின் விளக்குகளால் ஒளிரச் செய்துவிட்டார்கள்,தேர்தல் வாக்குறுதியை சொன்னபடி நிறைவேற்றிவிட்டார்கள்.இந்தியா மீண்டும் மின் விளக்குகளால் நாடெங்கும் ஒளிர்கிறது, ஏழ்மையும் வறுமையும் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது சபாஷ் ....


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி