உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பென்ஷன் பண்டுகள் துவங்க வங்கிகளுக்கு அனுமதி கிடைத்தது

 பென்ஷன் பண்டுகள் துவங்க வங்கிகளுக்கு அனுமதி கிடைத்தது

தே சிய ஓய்வூதிய திட்டத் தை மேலும் வலுப்படுத்தவும், மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் பி.எப்.ஆர்.டி.ஏ., எனும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இதன்வாயிலாக, பென்ஷன் திட்டங்களுக்கு இடையே போட்டி அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையும், அதிக லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளது. முக்கிய அம்சங்கள்  தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நிதியை நிர்வகிக்க, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், இனி தனியாக பென்ஷன் பண்டை துவங்கலாம். இதற்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வலுவான நிதிநிலை கொண்ட வங்கிகள் மட்டுமே இதற்கு அனுமதிக்கப்படும்.  ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இது, சந்தாதாரர்களுக்கு லாபகரமாக அமையும்.  நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு பகுதி, மக்களிடையே ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தப்படும்.  என்.பி.எஸ்., டிரஸ்ட் வாரியத்துக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் தினேஷ் குமார் காரா இந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஸ்வாதி அனில் குல்கர்னி மற்றும் டாக்டர் அரவிந்த் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ