உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., ஜனநாயகத்திற்கு எதிரானது: சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

பார்லி., ஜனநாயகத்திற்கு எதிரானது: சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ எனது உரையின் சில வரிகள் நீக்கப்பட்டது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது'', என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

அதிர்ச்சி

அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: ஜூலை1, 2024 அன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எனது உரையிலிருந்து சில வரிகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் இக்கடிதத்தை எழுதுகிறேன். சில கருத்துகளை நீக்குவதற்கான அதிகாரங்கள் சபாநாயகருக்கு உண்டு. லோக்சபாவில் நடைமுறை மற்றும் நடத்தை விதி 380 ல் குறிப்பிடப்பட்டு உள்ள வார்த்தைகளை மட்டுமே நீக்க முடியும். ஆனால் எனது உரையின் கணிசமான பகுதிகள் வெறுமனே நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த வார்த்தைகள் விதி 380 ல் வராது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjg5rgte&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சேர்க்க வேண்டும்

நான் அவையில் தெரிவித்தது யதார்த்தமானது. உண்மை நிலை. அரசியல் சாசன சட்டம்105(1) ன்படி, எம்.பி.,க்கள் ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் நேற்று நான் செயல்பட்டேன். எனது பேச்சின் சில வரிகள் நீக்கப்பட்டது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆனால், அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியே பேசினார். ஆனால், ஆச்சர்யமாக ஒரு வார்த்தை மட்டும் தான் நீக்கப்பட்டு உள்ளது. அவை குறிப்பில் நீக்கப்பட்ட கருத்துகளை மீண்டும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

S RAJAGOPAL
ஜூலை 03, 2024 16:57

காங்கிரஸ் கட்சி 1984க்கு பிறகு வந்த தேர்தல்களில் 1991,1996,1998,2004,2009,2014,2019,2024அறுதி பெரும்பான்மை பெற்றது கிடையாது. கூட்டணி கட்சிகள் மூலம் ஆட்சி அமைத்தது.இப்போது பிஜேபி மூன்றாவது முறையாக 240 எம் பி களை வைத்து தனிப்பெரும் கட்சியாக உள்ளது இருந்தாலும் கடந்த கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை விட பன்மடங்கு மேல் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியாது .


R.Varadarajan
ஜூலை 03, 2024 01:35

ஜனாதிபதி, உப ஜனாதிபதி, தேர்தல் ஆணையர் , சபாநாயகர் , நீதித்துறையாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியவர்கள் எல்லாம் அறுபது வருடங்களாக உங்கள் அடிமைகள்தானே?


KRISHNAN R
ஜூலை 02, 2024 22:14

பாராளுமன்றம்... இப்படியே போனால் மக்கள் ...பாடு திண்டாட்டம்.. தாம்......


sankaranarayanan
ஜூலை 02, 2024 20:49

மஹாகணம் பொருந்திய மக்கள் அவை சபாநாயாகிருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பப்புவின் உரையிலிருந்து சில வரிகள் நீக்கப்பட்டதற்கு பதிலாக பப்புவையே பாராளுமன்ற மக்கள் சபையிலிருந்து நீக்கியிருந்தால் இனி இது போன்ற குழப்பங்கள் வாராது ஆக்கபூர்வமான காரியங்களை நாட்டிற்கு மக்களுக்கு பிரதமரும் மற்ற அமைச்சர்களும் செய்ய எதுவாகவும்


தமிழ்வேள்
ஜூலை 02, 2024 20:37

பார்லிமென்ட் ஜனநாயகத்தின் முதல் எதிரி இவனும் இவனுடைய சீன பாக். ஜார்ஜ் சோரஸ் அடிமைக்கட்சி மற்றும் இவனது கூட்டணியில் உள்ள புள்ளி டிக்கெட்டுகள் மட்டுமே..


Manickam Mani
ஜூலை 02, 2024 20:17

குடும்ப உறுப்பினர்களை மட்டுமே உயர் பதவிகளில் அமர்த்தும் கூட்டம் ஜனநாயகத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கிறது. அவசரநிலையை அறிவித்து, அதுவும் சட்டத்தின் செயல்பாடுகளைக் கடைபிடிக்காமல், எதிர்க்கட்சியினரை ஜெயிலில் வைத்துக்கொடுமைபடுத்தியக் கூட்டம். சீக்கிர்களை கொத்து கொத்தாகக் கொன்ற கூட்டம் வெட்கமில்லாமல் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.


செந்தமிழ் கார்த்திக்
ஜூலை 02, 2024 17:55

பாஜக மற்றும் RSS சார்ந்தவர்கள் மட்டுமே இந்துக்கள் கிடையாது என்பதை மிக தெளிவாக ராகுல் சொன்னதை மனதார வரவேற்கிறேன். இதை கேட்பவர்களுக்கு வயிறு எறிந்தால் ஜெலுசில் வாங்கி குடிக்கவும்.


yuvaraj
ஜூலை 02, 2024 17:20

மொத்தமாக நிக்கி இருக்க வேண்டும் ஒன்று கூட உபயோகமானது இல்லை


S. Balakrishnan
ஜூலை 02, 2024 17:06

ஏற்கனவே சர்ச்சை பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்டு பழக்கப் பட்டவர் தான் இவர். ஆடும் வரை ஆடிவிட்டு பின் அடங்கி போக வேண்டிய சுழ்நிலை வந்ததால் இப்படி ஒரு டிராமா.


Dharmavaan
ஜூலை 02, 2024 16:26

நீக்கியது என்ன என்று மக்களுக்கு ராகுல் சொல்ல வேண்டும்.ஜனாதிபதி உரையில் அவைத்தலைவரை இழுத்தது தவறு அநாகரீகம்


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி