உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடகிற்கு தனி லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., சிம்ஹா ஆர்வம்

குடகிற்கு தனி லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., சிம்ஹா ஆர்வம்

குடகு: ''குடகு மாவட்டத்துக்கு தனி லோக்சபா தொகுதி உருவாக்க வேண்டும். இதற்காக பலமாக குரல் எழுப்புவேன்,'' என, மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.குடகு மாவட்டம், மடிகேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:குடகின் சிறப்பு கலாசாரம், மொழி, பழக்க வழக்கங்களை கொண்ட ஒரு பகுதி. மக்கள்தொகை குறைவாக இருப்பதால், எப்போதும் மங்களூரு அல்லது மைசூரு லோக்சபா தொகுதியுடன் இணைக்கப்படுகிறது.குடகிற்கு தனி லோக்சபா தொகுதி வழங்கப்பட வேண்டும். 2026க்குள் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது குடகிற்கு தனி லோக்சபா தொகுதி வழங்க வேண்டும் என கடுமையாக குரல் எழுப்புவேன். சாமனுார் சிவசங்கரப்பா மட்டுமின்றி, பல காங்கிரஸ் தலைவர்களும் நாட்டை பொறுத்தவரை நரேந்திர மோடியை பிரதமராக்க விரும்புகின்றனர்.தற்போது சிவசங்கரப்பா, பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை