உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ., விடிய விடிய... ஆலோசனை: அமைச்சர் பதவிகள் பங்கிடுவதில் தலைவலி

கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ., விடிய விடிய... ஆலோசனை: அமைச்சர் பதவிகள் பங்கிடுவதில் தலைவலி

புதுடில்லி:அமைச்சர் பதவிகள் பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் விடிய விடிய ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கு முந்தைய தொகுதி பங்கீட்டை விட, அமைச்சரவை பங்கீடு பா.ஜ.,வுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் வருகையால் டில்லி பரபரப்பாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=54ibh04p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழா ஏற்பாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், பிரதமருடன் பதவியேற்க போகும் அமைச்சர்கள் யார் என்பதே முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

பேரம் பேசுகின்றன

கடந்த இரண்டு முறை ஆட்சி அமைத்தபோது, இல்லாத சிக்கல் தற்போது பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் பா.ஜ., வென்றாலும், கூட்டணி கட்சிகளே புதிய அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்க உள்ளன. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் போன்றவை, முந்தைய தேர்தல்களின் பின்னரும் பதவிகளுக்காக முரண்டு பிடித்து, பா.ஜ.,வுடன் முட்டிக் கொண்ட கட்சிகளே.பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை இருந்தபோதே மல்லுக்கட்டிய அவை, தற்போது மாறியுள்ள சூழலில் தங்கள் விருப்பங்களை அழுத்தமாக முன் வைத்து பேரம் பேசுகின்றனர். உள்துறை, ராணுவம், நிதி, வெளியுறவு ஆகிய நான்கு துறைகளை விட்டுத்தர, பா.ஜ., தயாராக இல்லை. ரயில்வே, சாலை போக்குவரத்து, சட்டம், தகவல் தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றையும் தனக்கே வைத்துக் கொள்ள விரும்புகிறது. இரண்டு பெரிய கட்சிகளை தவிர, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பிரிவின் சிராக் பஸ்வான், அப்னா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் என, அனைத்துமே அமைச்சரவையில் இடம்பெற விரும்புகின்றன.

சிபாரிசு

பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களும் தயக்கம் இல்லாமல் கோரிக்கை வைக்கின்றனர். ஒவ்வொருவரின் சார்பாகவும் எங்கெங்கோ இருந்து சிபாரிசுகளும் வருகின்றன. இதனால் நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா அடங்கிய குழு திணறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஆலோசனை நேற்றும் விடிய விடிய நீடித்தது.கடந்த இரண்டு ஆட்சியின்போது, யார் யார் அமைச்சராவர் என்பதில் பல விவாதங்கள் நடந்த போதும், மோடி பல ஆச்சரியமான தேர்வுகளை செய்திருந்தார். தற்போதும் அதே பாணியை அவர் பின்பற்றக்கூடும் என்பதால், இன்றைய பதவியேற்பு விழாவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

venugopal s
ஜூன் 09, 2024 20:18

கல்யாணம்,மனைவியே வேண்டாம் என்று பேச்சிலராக ஜாலியாக சுற்றிக் கொண்டு இருந்தவருக்கு திடீரென இரண்டு பெண்களை திருமணம் செய்து வைத்தது போல் ஆகிவிட்டதே, பாவம்!


r ravichandran
ஜூன் 09, 2024 13:34

மோடியே வெளியேறுங்கள் என்று சொன்னால் கூட நாயுடு, நிதிஷ் குமார் வெளியேற மாட்டார்கள், காரணம் அவர்கள்16+12 இங்கு பிஜேபி கட்சிக்கு அடுத்த இரண்டாம், மூன்றாம் நிலையில் இடம் உள்ளவர்கள். அவர்கள் கேட்கும் இலாகா ஓரளவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தி கூட்டணிக்கு சென்றால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவ் 37, மம்தா பானர்ஜி 30, ஸ்டாலின் 22, உத்தவ் தாக்கரே 12, சர்த் பவார் 10 என்று இடங்கள் வைத்து கொண்டு உள்ளனர், நாயுடு, நிதிஷ் குமாருக்கு அங்கு அவர்களுக்கு கொடுத்தது போக இவர்களுக்கு கால்நடை போன்ற இலாகா கிடைக்க வாய்ப்பு உள்ளது. காரணம் அங்கு இவர்கள் 6, 7 படி நிலையில் தான் இருப்பார்கள். மேலும் 38 கட்சி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடும். இது இவர்கள் இருவரும் அறிவார்கள்.


R.PERUMALRAJA
ஜூன் 09, 2024 12:44

நிதிஷ்குமாருக்கு வருமானம் கொழிக்கும் பதவிகள் , குறிப்பாக சுரங்கத்துறை கொடுப்பது ப ஜா கா விற்கு நல்லதல்ல . நிதிஷ்குமாரை கழற்றிவிட அணைத்து முயற்சிகளும் பா ஜா கா எடுப்பது சிறந்தது


R.PERUMALRAJA
ஜூன் 09, 2024 12:31

அடுத்த இரண்டு மாதங்களில், 5-6 சுயேச்சையாக வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ப ஜெ க உறுப்பினர்களாக ஆக்கி, மீண்டும் தேர்தலில் போட்டி இட செய்து ப ஜெ க வாக வெற்றிபெற செய்ய ..கூட்டணிக்கட்சிகளின் புகைச்சல் அப்படியே அடங்கிவிடும் .குறிப்பாக கேரளா காங்கிரஸில் இருந்து ப ஜா க விற்கு ஓடிவர பலர் முனைப்புடன் இருப்பதாக தகவல் .


S. Narayanan
ஜூன் 09, 2024 12:20

கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத மற்றும் சுயநலம் கருதாமல் மோடி நிர்வாகம் அமைய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இப்போது மோடிக்கு உலக அளவில் மரியாதையும் அதனால் பிரமிக்க தக்க வளர்ச்சி அடைய வழி கிடைக்க இருக்கின்றன. அதனால் கூட்டணி கட்சிகள் இந்தியாவை வளர்ச்சி நாடாக மோடியுடன் சேர்ந்து அரசு நடக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்


Duruvesan
ஜூன் 09, 2024 12:15

பாஸ் 6 மாசம், ஆட்சி போய்டும், எல்லோரையும் மந்திரி ஆகிடுங்க


Duruvesan
ஜூன் 09, 2024 11:00

2025 ல மீண்டும் எலேச்டின். விடியல் சார் பிரதமர் ஆவது உறுதி


கனோஜ் ஆங்ரே
ஜூன் 09, 2024 12:18

துர்வாசர் சார்... நான் அன்னைக்கே சொன்னேன், ரொம்ப ஆடாதீங்க...ன்னு.


abdulrahim
ஜூன் 09, 2024 09:56

போட்ட வெறுப்பு விதை எல்லாம் முளைச்சி வந்திருக்கு , பட வேண்டியது இன்னும் நிறைய இருக்கு....


பேப்பர்காரன்
ஜூன் 09, 2024 17:45

வெறுப்பின் உச்சமே உங்கள் எண்ணங்கள் தானே ?


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 09:20

நானூறுக்கு மேல் வெல்வது உறுதி என்ற பேச்சினால் பெரும்பாலான ஊழியர்கள் அசிரத்தையாக இருந்து விட்டனர். முஸ்லிம்களில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் வாக்களித்தனர். ஆனால் ஹிந்து வாக்காளர்கள் பாதிபேர் அதீதமான நம்பிக்கையால் வாக்களிக்காமல் விட்டு விட்டனர். இப்போது கூட மோசமில்லை. எதிரணிக்கு விவசாயம், நீர்ப்பாசனம், சமூகநலத்துறை, விமானப் போக்குவரத்து, எஃகு, ஒளிபரப்பு போன்ற அதிமுக்கிய துறைகளை மட்டுமே கொடுக்கலாம்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 09, 2024 12:21

அய்யா... அங்குசாமி... நீங்க கொடுக்குறதையெல்லாம் வாங்கிட்டது போன மாசம் 2019.... இப்ப அவங்க கேட்டதையெல்லாம் கண்டிப்பா கொடுத்தாகணும், இது இந்த மாசம்... புரியுதா....?


RAAJ68
ஜூன் 09, 2024 09:04

ஸ்டாலின் 40 பேருடன் ரெடியாக இருக்கிறார் மோடியுடன் கூட்டு சேர அப்படி நேர்ந்தால் ஐந்து வருடம் ஆட்சி நிச்சயம் எனவே நாயுடு மற்றும் பல்டி குமார் இதை நினைவில் கூற வேண்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ