உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின்

லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின்

சென்னை: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் வழக்கு பதிந்தனர். வழக்கை முடிக்க சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித்திவாரியை 2023 டிச.,1 ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kdhvbgee&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என, உயர்நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‛‛மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் போலீசாரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இச்சூழலில் ஜாமின் வழங்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அங்கித் திவாரி நாடினார். இன்று (மார்ச் 20) வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛‛உச்சநீதிமன்றத்தின் அனுமதியில்லாமல், தமிழகத்தை விட்டு வெளியே செல்ல கூடாது' என்ற நிபந்தனைகளுடன் அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கினர். அங்கித் திவாரி மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவல் நீட்டிப்பு

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு இன்றுடன் காவல் நீட்டிப்பு தேதி முடிந்ததால் மீண்டும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மதியம் 3:00 மணிக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதித்துறை நடுவர் மோகனா, 8வது முறையாக ஏப்.4ம் தேதி வரை அங்கித்திவாரிக்கு, நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
மார் 20, 2024 20:22

அவசர அவசரமாக அங்கித்திவாரியை கைது செய்து மத்திய புலனாய்வு அலுவகத்தையும் சூறையாடிய தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்னுமா குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் போலீசாரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இதிலிருந்து தெரிகிறது அவர்களின் உள்நோக்கம் என்னவென்று வலை வீசிப்பிடித்ததுடன் மத்திய அரசின் அலுவலகம் புகுந்து அங்கிருந்த எல்லா ரிகார்டுகளையும் எடுத்துச்சென்றது மாபெரும் கிருமிகள் குற்றமென்று இதுவரை எந்த நீதிமன்றமும் கூறவில்லையே


தாமரை மலர்கிறது
மார் 20, 2024 20:15

திமுக ஆட்சியில் நல்ல அதிகாரிகளுக்கு நேரும் சோதனை.


தஞ்சை மன்னர்
மார் 20, 2024 17:54

அதெப்படி அமலாக்க துறை கைது செய்யும் ஒருவருக்கு ஜாமீன் வழங்க தடை வழங்கப்படுத்து அதே அமலாக்கத் துறை சேர்ந்த நபருக்கு ஜாமீன் கொடுக்க முடியுது புரியவில்லை


Dharmavaan
மார் 20, 2024 21:07

அவனவன் அடித்த கொள்ளையை பொறுத்து .பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தவனை தண்டிப்பது போதாது


Lion Drsekar
மார் 20, 2024 16:15

அந்நிய நாட்டு செயல்பாடுகள் போல் இருக்கிறது . அண்டை நாட்டில் இருந்து நமது விமானப்படை வீரரை வேகமாகவும்,. பத்திரமாகவும் கொண்டுவந்துவிட்டோம் ஆனால் இங்கு இருப்பவரை வெளியே கொண்டுவருவதற்கு .. ?? வாழ்க ஜனயாகம் . வந்தே மாதரம்


enkeyem
மார் 20, 2024 15:31

இனிமேல் தான் திராவிஷா அரசு செய்த பல தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகப் போகிறது


ganesha
மார் 20, 2024 14:59

நல்ல காலம் பொறக்க ஆரம்பிச்சுடுத்து ????????


Bala
மார் 20, 2024 14:37

துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.


N SASIKUMAR YADHAV
மார் 20, 2024 14:09

லஞ்சம் கொடுத்த மருத்துவருக்கு என்ன தண்டனை. அந்த மருத்த்வர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது


Dharmavaan
மார் 20, 2024 21:08

அவன் திமுக கொத்தடிமை திருட்டு கூட்டம் தண்டனை கூடாது


Vivekanandan Mahalingam
மார் 20, 2024 14:04

இன்னும் பல உண்மைகள் வெளியில் வர வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை