உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆத்தாடி...! வெறும் 50 கிராம், மதிப்போ ரூ.850 கோடி...! மொத்தமாய் ஷாக் ஆனது பீகார் போலீஸ்

ஆத்தாடி...! வெறும் 50 கிராம், மதிப்போ ரூ.850 கோடி...! மொத்தமாய் ஷாக் ஆனது பீகார் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும், 850 கோடி ரூபாய் மதிப்புள்ள கதிரியக்க தனிமம் சிக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சோதனை

இதுபற்றி கூறப்படுவதாவது; கோபால்கஞ்ச் மாவட்டம், குசாய்கட் அருகே பல்தேரியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி உள்ளூர் போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர், நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பளபள பொருள்

அவர்கள் வைத்திருந்த ஒரு குடுவை, அதனுள் பளபளப்பாக காணப்பட்ட ஒரு பொருள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 50 கிராம் எடை கொண்ட அந்த பொருளை பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

அணுகுண்டு

தாங்கள் 3 பேரும் கடத்தி வந்தது, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் கதிரியக்கத்தன்மை கொண்ட செயற்கை ரசாயன தனிமம் கலிபோர்னியம் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் சர்வதேச சந்தையில் ஒரு கிராம் கலிபோர்னியம் தனிமத்தின் மதிப்பு ரூ.17. கோடியாகும். 50 கிராம் என்னும்போது அதன் சர்வதேச மதிப்பு ரூ.850 கோடியாக மதிப்பிடப்பட்டது. விவகாரம் பெரிய அளவில் இருக்கும் என்பதால் போலீஸ் ஸ்டேஷன் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரத்யேக உடை அணிந்த அணு விஞ்ஞானிகள் டில்லி, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டனர். கடத்தி வந்த 3 பேரின் பெயர்கள் சோட்டிலால் பிரசாத், சந்தன்குப்தா, சந்தன்ராம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணை தீவிரம்

3 பேரும் எங்கிருந்து இந்த தனிமத்தை கடத்தி வந்தனர், அவர்களுக்கு ஏஜெண்டாக யாரேனும் இருக்கின்றனரா? என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.கடைசியில் ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அதன்படி, கைப்பற்றப்பட்ட கதிரியக்க தனிமம், கலிபோர்னியம் இல்லை; இது திறன் குறைந்த வேறு வகை கதிரியக்க தனிமம் என தெரிய வந்துள்ளது. இதனால் பீகார் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath Kumar
ஆக 19, 2024 11:22

தமிழ் காட்டில் கஞ்சா கடுத்துறானுக என்று லாரியை ஆரிய கும்பல் இப்போ பிஹாரில் என்ன கருதி இருக்கானுக என்று பார்த்தால் கதிர் இயக்க பொருள் பார்வை இல்லை தமிழ் நாட்டை விட பீர்கள் கொஞ்சம் விவமானவங்கதான் போல ஏத்தி கடத்தினால் அதிக லாபம் என்று தெரிந்து கொண்டு செய்து உள்ளார்கள் போகட்டும் கடைதானவர்கள் பேரை குறிப்பிட வில்லையே ஏன்


Barakat Ali
ஆக 17, 2024 13:49

That was seminal fluid of Dinosaur. It has become like a powder because some million years had passed.


Kundalakesi
ஆக 17, 2024 13:10

Dawn செய்தியில் உண்மை வந்துவிட்டது . மக்களை முட்டாளாக நினைப்பது தவறு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 16:43

உண்மை ..... உங்கள் கருத்தைப் படித்துவிட்டுத்தான் நானும் பார்த்தேன் .... கேன்சரையும் குணப்படுத்த உதவுவதால் இந்தியாவில் சட்டவிரோத சந்தை உள்ளது என்றும் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும், இதன் புழக்கத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள் ....


Ramesh Sargam
ஆக 17, 2024 12:53

எதை கடத்தவேண்டும், எப்படி கடத்தவேண்டும் என்று அறிய தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபரை அணுகவும்.


Kasimani Baskaran
ஆக 17, 2024 12:14

தேசவிரோதிகளுக்கு இதுவெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. தோரியமும் கூட பல நாடுகளுக்கு தேவை. கப்பல் வைத்து கடலுக்குள் மண் அள்ளும் கோஷ்டியை கண்காணிப்பது அவசியம்.


அஜய் சென்னை இந்தியன்
ஆக 17, 2024 11:58

பரவசப்பு செய்திக்காக ஒரு பெரிய தலைப்பு, உள்ள crime story கதை, கடைசியில் இந்தியன் 2 movie முடிவுரை .....முடியலை


Swaminathan L
ஆக 17, 2024 11:53

அது சரி. ஆனால், அந்தப் பொருளும் அவர்களுக்கு எப்படி கிடைத்தது, எங்கே எதற்காகக் கொண்டு போனார்கள் அந்த மூன்று பேரும் என்று விசாரணை தொடருமா இல்லையா?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை