உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்கார வழக்கில் ஏட்டு ஜாமின் ரத்து ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

பலாத்கார வழக்கில் ஏட்டு ஜாமின் ரத்து ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

பெங்களூரு: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஏட்டுவின் ஜாமின் ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.பெலகாவி, பைலஹொங்களாவின், நேகினஹாளா கிராமத்தை சேர்ந்தவர் பக்கீப்பா, 32. இவர் பெங்களூரின், மஹாதேவபுரா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுகிறார்.கடந்த 2019ல் வீட்டை காலி செய்ய வைப்பது தொடர்பாக புகார் அளிக்க ஷபனா தாஜ், 27, மஹாதேவபுரா போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். அப்போது இவருக்கும், ஏட்டு பக்கீரப்பாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.காதலிப்பதாக கூறிய பக்கீரப்பா, திருமணம் செய்து கொள்வதாக ஷபனா தாஜை நம்ப வைத்தார். 2019 முதல் 2022 இடையே, அவரை பல முறை பலாத்காரம் செய்தார். பின்னர், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் மோசடி செய்தார். இதனால் மஹாதேவப்பா போலீஸ் நிலையத்தில், ஏட்டு பக்கீரப்பா மீது அவர் புகார் அளித்தார். அவர் மீது வழக்குப் பதிவானது.கைது பயத்தால் இவர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுக்கொண்டார். கேள்வி எழுப்பி ஷபனா தாஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்றமும் முன்ஜாமினை ரத்து செய்திருந்தது.இந்த தகவலை செஷன்ஸ் நீதிமன்றத்தின் கவனத்துக்கு, பக்கீரப்பா தரப்பில் கொண்டு செல்லவில்லை.மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஷபனா தாஜ் முறையிட்டார். மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், உண்மையை மூடி மறைத்த பக்கீரப்பாவுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அவரது முன்ஜாமினை ரத்து செய்ததுடன், அவரை கைது செய்யும்படி டி.சி.பி.,க்கு நேற்று உத்தரவிட்டது.இரண்டு வாரங்களில், அபராதத் தொகையை மாநில சட்டசேவை ஆணையத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை