உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணை ஆபாசமாக திட்டிய டி.எஸ்.பி., மீது வழக்கு

பெண்ணை ஆபாசமாக திட்டிய டி.எஸ்.பி., மீது வழக்கு

பெலகாவி: டாக்டர் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை ஆபாசமாக திட்டியதாக, டி.எஸ்.பி., மீது வழக்குப் பதிவாகியுள்ளது.பெலகாவி அதானியில் உள்ள தனியார் மருத்துவமனையில், 30 வயது பெண், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார். அதே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் யல்லலிங்கா. கடந்த சில மாதங்களாக பெண்ணுக்கு, டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து நேற்று முன்தினம் அதானி போலீஸ் நிலையத்தில் பெண் புகார் செய்தார். அப்போது அங்கு இருந்த அதானி டி.எஸ்.பி., பிரசாந்த், டாக்டருக்கு ஆதரவாக பெண்ணை ஆபாசமாக பேசி உள்ளார்.இதனால் டி.எஸ்.பி., மீதும் பெண் புகார் செய்தார். ஆனால் போலீசார், புகாரை ஏற்கவில்லை. நேற்று காலை எஸ்.பி., பீமா சங்கரிடம், டி.எஸ்.பி., மீது பெண் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின்பேரில் டி.எஸ்.பி., மீது வழக்குப் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ